Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஜனவரி, 2022

கிரெடிட் கார்டு பயனர்ளே உஷார்.. இனி தாமதமாக கட்டணம் செலுத்தினால் டபுள் அபராதம்.. அதிகரிக்கும் கட்டணம்..

 ICICI வங்கி போல் மற்ற வங்கிகளும் கட்டணத்தை அதிகரிக்கலாம்

நீங்களும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் நபர்களில் ஒருவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. ஐசிசிஐசிஐ வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு கட்டணத்தை இனி நீங்கள் தாமதமாகச் செலுத்தினால், முன்பை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும். பிற பெரிய வங்கிகளும் தாமதமான கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான அபராதத்தை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

கிரெடிட் பயனர்களே கவனம்.. இனி தாமதமாகக் கட்டணம் செலுத்தாதீர்கள்

கடந்த சில ஆண்டுகளில், கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. நீங்களும் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், இந்த செய்தி உங்களுக்கானது. பல நேரங்களில் சில காரணங்களால் கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது உங்கள் பட்ஜெட்டையும் கெடுத்துவிடும். இனி நீங்கள் இந்த கட்டணங்களைத் தாமதமாகச் செலுத்தினால், முன்பை விட அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முந்தைய காலத்தை விட தாமத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா?

ஆனால் இப்போது ஐசிஐசிஐ வங்கி (ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு) கிரெடிட் கார்டை சரியான நேரத்தில் செலுத்தாததற்கான தாமதக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பணம் செலுத்துவதற்கு முன்பை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை, ஐசிஐசிஐ வங்கி சார்பில், வாடிக்கையாளர்களுக்குச் செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.

ICICI வங்கி போல் மற்ற வங்கிகளும் கட்டணத்தை அதிகரிக்கலாம்

உயர்த்தப்பட்ட கட்டணங்கள் பிப்ரவரி 10, 2022 முதல் அமலுக்கு வரும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. தாமதமாகப் பணம் செலுத்துவதுடன், இப்போது கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுப்பதும் முன்பை விட அதிகமாக இருக்கும். ஆதாரங்களின்படி, பிற கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளும் முன்பை விட தாமதமாகச் செலுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப் பரிசீலித்து வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வங்கிகளிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பை விட தளர்வாக இருக்கும்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியின்படி, உங்கள் நிலுவைத் தொகை ரூ. 100க்கு குறைவாக இருந்தால், தாமதக் கட்டணமாக நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இதை விட அதிகமாக நீங்கள் கடன்பட்டால், உங்கள் பாக்கெட்பணம் முன்பை விட அதிகமாக செலவாக போகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இவை தான் புதிய கட்டணங்களாக இருக்கும்

உங்கள் இருப்பு ரூ.100 முதல் ரூ.500 வரை இருந்தால், தாமதமாகச் செலுத்தினால் ரூ.100 வசூலிக்கப்படும். அதேபோல ரூ.501 முதல் ரூ.5000 வரையிலான நிலுவைத் தொகைக்கு ரூ.500 அபராதம், மறுபுறம் ரூ.5000 முதல் 10000 வரை நிலுவைத் தொகை இருந்தால் ரூ.750 அபராதம். இருப்புத் தொகை 10001 முதல் 25 ஆயிரம் வரை ரூ.900 அபராதம் விதிக்கப்படும். மறுபுறம், 25001 முதல் 50 ஆயிரம் வரையிலான நிலுவைத் தொகைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அதற்கு மேல் 1200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பணம் எடுப்பதற்கும் அதிக கட்டணமா?

ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்க, மொத்தத் தொகையில் 2.5 சதவீதம் அல்லது ரூ.500, எது அதிகமோ அதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், காசோலை திரும்பவும், ஆட்டோ டெபிட் திரும்பவும், குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். 25 ஆயிரத்துக்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் இரண்டு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, மேலே உள்ள அனைத்து கட்டணங்களுக்கும் ரூ. 50 + ஜிஎஸ்டி தனித்தனியாகச் செலுத்தப்படும். கிரெடிட் கார்டு பயனர்கள் அனைவரும் உங்களின் கிரெடிட் கார்டு பயன்பாட்டை திட்டமிட்டுப் பயன்படுத்துவது தேவையில்லாதா கட்டணங்களைத் தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக