Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 மார்ச், 2022

மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள... இதை படிங்க... சிரிங்க... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------------
சரவெடி காமெடிகள்...!!
------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவர் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்... இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி : அவருக்கு எத்தனை மாத்திரை கொடுக்கணும் டாக்டர்?
டாக்டர் : மாத்திரை அவருக்கில்ல, உங்களுக்கு.
மனைவி : 😏😏
------------------------------------------------------------
ஆசிரியர் : மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தரணும்.
மாணவர் : ஏன் சார்? இந்தியா என்ற பேர் நல்லா இல்லையா?
ஆசிரியர் : 😕😕
------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------------------------------
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பொருள் :

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை, அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
------------------------------------------------------------
பழமை உண்மைகள்...!!
------------------------------------------------------------
😢 செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

🔥 தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

🌅 கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

👄 கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

💵 கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். 🌴 மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
------------------------------------------------------------
முதன் முதலில்...!!
------------------------------------------------------------
👉 தமிழக அரசு முத்திரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை முதன் முதலில் தேர்வு செய்தவர் பி.எஸ்.குமாரசுவாமி ராஜா.

👉 ஒரு மணிக்கு 60 நிமிடம் என முதன் முதலில் வகுத்தவர்கள் பாபிலோனியர்கள்.

👉 முதன் முதலில் ரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் கிறித்தோபர் கொலம்பஸ்.

👉 முதன் முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் சாமுவேல் ஜோன்சன்.

👉 முதன் முதலில் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ருடோல்ப் டீசல் என்பவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக