Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர்

Vanabadrakali Amman Temple : Vanabadrakali Amman Vanabadrakali Amman Temple  Details | Vanabadrakali Amman- Mettupalayam | Tamilnadu Temple |  வனபத்ரகாளியம்மன்
இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டம்  என்னும் ஊரில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூர்pலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் மேட்டுப்பாளையம் உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல நகர பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் மூலவரான அம்மன் சுயம்புவாக அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள்.

அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மனுக்கு வனபத்ரகாளியம்மன் என்று பெயர் வந்தது.

வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய்கள் வெட்டுகின்றனர்.

அம்மனுக்கு ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தான் நடைபெறும்.

வேறென்ன சிறப்பு?

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் தல விருட்சமாக தொரத்திமரம் அமைந்துள்ளது.

புதிதாக தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றி கேட்கும் நபர்கள் சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம்.

அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து எடுத்துப் பார்க்கும்போது மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஆடிக்குண்டம் 15 நாள் திருவிழா நடைபெறும். அதாவது, அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று ஆடி 1ஆம் செவ்வாய் பூச்சாட்டி, 2ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3ஆம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும்.

தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இத்திருக்கோயிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்கும்.

அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் பிரார்த்தனை நிறைவேறும்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டியவை நிறைவேறியவுடன் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக பக்தர்கள் வழங்குவது வழக்கம். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக