Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 11 மார்ச், 2022

தரமான சிப்செட் உடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தரமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்அறிமுகம் செய்யப்படும்

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்ப
புதிய சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!