Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

இனி நீங்களும் வீடியோ எடிட்டர் தான்- வேலையை எளிதாக்கும் மைக்ரோசாஃப்ட் வீடியோ எடிட்டர் ஆப்: இதுவேற இருக்கு!

தொழில்நுட்பங்கள் பல கட்டம் முன்னேறிக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதாவது சமூகவலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவராக இருக்கின்றனர்.

 வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற பயன்பாடுகளில் வீடியோக்கள் பகிர்வதோடு ஸ்டேட்டஸ் வைப்பது உண்டு. ஒவ்வொருவரிடமும் சுயமாக வீடியோ எடிட்டிங் செய்து பகிர வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதற்கு பல்வேறு பயன்பாடு பிரதானமாக இருந்தாலும் எளிதான பயன்பாடுகளை நோக்கியே மக்கள் ஆர்வம் இருக்கிறது. அந்த தேவையை தற்போது பூர்த்தி செய்யும் விதமாக மைக்ரோசாஃப்ட் மென்பொருள் ஒன்றை அறிவித்துள்ளது.

க்ளிப்சேம்ப் வீடியோ எடிட்டிங் ஆப்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ClipChamp எனப்படும் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளை விண்டோஸ் 11 ஓஎஸ் உடன் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி முந்தைய விண்டோஸ் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோருக்கு சென்று இந்த கிளிப்சேம்ப் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் போது இதனுடன் கூடுதலாக ராயல்டி இல்லாத சில வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மென்பொருளின் குறிப்பிடத்தக்க அம்சம்

கிளிப்சேம்ப் மென்பொருளில் குறிப்பிடத்தக்க அம்சமும் இருக்கிறது. பொதுவாக ஒரு வீடியோக்கள் எடிட் செய்யும் போது அதற்கு வாய்ஸ் ஓவர், அதாவது குரல் வழங்கப்பட வேண்டும் என்ற தேவை இருக்கலாம். அதை பிரதானப்படுத்தும் விதமாக அஜூர் நிறுவனத்துடன் இணைந்து டெக்ஸ்ட் டூ ஸ்பீச் ஜெனரேட்டர் என்ற ஆப்ஷன் இடம்பெற்றிருக்கிறது. இந்த அம்சத்தின் மூலமாக யாருடைய உதவியும் இன்றி 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வாய்ஸ் ஓவர்கள் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சமானது பெயர் குறிப்பிடுவது போல் டெக்ஸ் டூ ஸ்பீச் அதாவது எழுத்தை குரலாக மாற்றும் தன்மை கொண்டதாகும்.

விண்டோஸ் 11 ஆதரவில் பயன்பாடு

மைக்ரோசாஃப்ட் தளத்தின் அடுத்த சிறந்த விஷயமாக இருப்பது கிளிம்ப்சேம்ப் ஆகும். கடந்த ஆண்டு கிளம்ப் சேம்ப்-ஐ வாங்கிய பிறகு தற்போது மைக்ரோசாஃப்ட் இந்த பயன்பாட்டை விண்டோஸ் 11 உடன் இணைக்கிறது. இது டிரிம்மிங், ஸ்பிளிட்டிங், ஸ்க்ரீன் ரெக்கார்டர் உள்ளிட்ட அம்சத்தை கொண்டிருக்கிறது. அடோப் ப்ரீமியர் ப்ரோ போன்றே சார்பு பயன்பாடுகளை போன்றே கிளிம்சேம்ப் ஒரு காலவரிசையை உள்ளடக்கி இருக்கிறது. பல ட்ராக் ஆடியோ ஆதரவு, யூஸர் ஃப்ரண்ட்லி எடிட்டிங் மூலம் வீடியோக்களை உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது. மைக்ரோசாஃப்ட் 70 மொழிகளில் வாய்ஸ் ஓவர்களை வழங்க அனுமதிக்கிறது. இது ஒன்டிரைவ்-ன் க்ளவுட் சேமிப்பகத்திற்கும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

பல மேம்பாடுகளை வழங்க தயாராகி வருகிறது

க்ளிம்சேம்ப் தற்போது விண்டோஸ் 11-ல் இன்பாக்ஸ் பயன்பாடாக உள்ளது என மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. அதேபோல் மைக்ரோசாஃப்ட் பேமிலி பயன்பாடும் இன்பாக்ஸ் பயன்பாடாகவே இருக்கிறது. இந்த பயன்பாடு அடுத்த வார தொடக்கத்தில் விண்டோஸ் 11-ல் வெளியிடத் தொடங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 பல மேம்பாடுகளை வழங்க தயாராகி வருகிறது. மைக்ரோசாஃப்ட் படிப்படியாக பல அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

மைக்ரோசாப்டின் மெட்டாவெர்ஸ் திட்டங்கள்

மைக்ரோசாப்டின் மெட்டாவெர்ஸ் திட்டங்களில் கேமிங் பிரிவு ஒரு பெரிய பகுதியாக இருக்கிறது. தற்போது மைக்ரோசாப்ட் ஆக்டிவிசன் பிளிசார்ட் என்ற மிகப்பெரிய கேமிங் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. பல பில்லியன் டாலர் தொகையில் இந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கி இருக்கிறது. மைக்ரோசாப்ட் வாங்கிய மிகப்பெரிய நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த நடவடிக்கையானது, கேமிங் 'மெட்டாவெர்ஸ் தளங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க உதவும்' என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா குறிப்பிட்டுள்ளார்.

புதிய கேமிங் சகாப்தம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இதுகுறித்து கூறுகையில், கேமிங்கை பாதுகாப்பானதாக மாற்றவும் உலகத் தர உள்ளடக்கங்களை வழங்க கேமிங் சமூகம் மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்கிறோம் எனவும் புதிய கேமிங் சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் விதமாக விளையாடுபவர்கள் மற்றும் கேமிங் வடிவமைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார். சமீபத்திய நாட்களாக கன்சோல்களை விட ப்ளே ஸ்டேஷன் 5 விற்பனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக