Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 மார்ச், 2022

6 முகங்கள் உண்டு. ஆனால் அலங்காரம் செய்ததில்லை... அது என்ன?

-----------------------------------------------------
சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
-----------------------------------------------------
அமலா : நான் என்ன சொன்னாலும், என் மருமகள் உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தைன்னு சொல்றா!
விமலா : இதிலே என்ன இருக்கு?
அமலா : எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு.
விமலா : 😂😂
-----------------------------------------------------
போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
ஒருவன் : எவன்டா அவன் மணி.. எனக்கு ஆர்டர் போடுறது..?
போஸ்ட்மேன் : 😳😳
-----------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
-----------------------------------------------------
💫 துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது.

💫 நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே.

💫 கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார்.

💫 ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப்படுகின்றது.

💫 ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறை செய்வதாக இருந்தால் அதுவே அதற்கு கிடைத்த பரிசாகும்.
-----------------------------------------------------
மாவட்டங்களும்... சிறப்புகளும்...!!
-----------------------------------------------------
நெய்வேலி - முந்திரி

நாகர்கோவில் - மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து

வாணியம்பாடி - பிரியாணி

மதுரை - மல்லிகை பூ, ஜிகர்தண்டா, சுங்குடி சேலை, அயிரைமீன் குழம்பு, இட்லி, தூங்காநகரம் 

புதுக்கோட்டை - சிறுமீன்

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - செட்டிநாடு சமையல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக