Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 மார்ச், 2022

அய்யோ பரிதாபம்! 4 நாடுகளிடம் ஆயிலுக்கு கெஞ்சும் பிடன்.."பிக்பாஸ்" அமெரிக்காவிற்கு இப்படி ஒரு நிலையா!

உலகின் எண்ணெய் வர்த்தகத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தி வந்த, எண்ணெய் வளம் உள்ள நாடுகளில் தேடி தேடி போர் தொடுத்து வந்த அமெரிக்கா தற்போது மொத்தமாக எண்ணெய் இன்றி கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக உலக நாடுகளிடம் எண்ணெய்க்காக கிட்டத்தட்ட கெஞ்சும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

உக்ரைன் - ரஷ்ய போரால் உலகம் முழுக்க கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. உலகில் ரஷ்யா மிக அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உதாரணமாக இந்தியா கச்சா எண்ணெய்க்கு அதிகம் நம்பி இருக்கும் நாடு ரஷ்யாதான்.

இப்படிப்பட்ட ரஷ்யாவில் நடக்கும் போர் காரணமாக உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு சர்வதேச பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்கா இருந்தது. இதற்கான ஆலோசனைகளை அமெரிக்கா செய்து வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவுடன் ஆலோசித்த பின் ரஷ்ய கச்சா எண்ணெயை அமெரிக்கா தடை செய்வதாக அறிவித்துள்ளது. நேற்றுதான் பிடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இனி எண்ணெய் வாங்காது. ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் அதன் அளவை குறைத்துக்கொள்ளும்.

சிக்கல்

அமெரிக்காவில் இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக அங்கு கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை அங்கு உச்சம் தொட்டுள்ளது. கடந்த மாதம் 3.9 டாலருக்கு இருந்த டீசல் விலை தற்போது 4.8 டாலருக்கு உயர்ந்து உள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் 131 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது.

மக்கள் அவதி

இதனால் அமெரிக்க மக்கள் கடுமையாக அவதிப்பட தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பலர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிரான அழுத்தமாக இது உருவெடுத்துள்ளது. விரைவில் மினி தேர்தலை அமெரிக்கா எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிடனுக்கு இது எதிராக திரும்பி உள்ளது. கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக முடங்கிய அமெரிக்கா தற்போது எண்ணெய் இல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கெஞ்சும் அமெரிக்கா

இதனால் உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா முடிவு செய்தது, நிகோலஸ் மதுராவிற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா தற்போது வேறு வழியின்றி பகையாளியிடம் கைகட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மதுரோ கொஞ்சம் பெருந்தன்மையாக அமெரிக்காவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

சவுதி

அதேபோல் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானிடம் சவுதியில் இருந்து அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இவரை பிடனை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏமன் போரில் சவுதி வெற்றிபெற உதவ வேண்டும், சல்மானை சவுதியின் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கண்டிஷன்களை சல்மான் அமெரிக்காவிற்கு போட்டுள்ளார் . அதுவரை எண்ணெய் உற்பத்தியை உயர்த்துவது பற்றி பேச முடியாது என்று சல்மான் அமெரிக்காவிற்கு கண்டிப்புடன் அறிவித்துள்ளதாக ராய்டர்ஸ் ஊடகம் செய்து வெளியிட்டுள்ளது.

அமீரகம்

அதேபோல் அமீர்கத்திடம் எண்ணெய் வாங்க ரஷ்யா கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் எண்ணெய் உற்பத்தியை பெருக்கும் எண்ணத்தில் அமீரகம் இல்லை என்று அமெரிக்காவிடம் தெளிவாக தெரிவித்துவிட்டது. இங்கும் அமெரிக்காவிற்கு பெரிய அடிதான். இதெல்லாம் போக அதேபோல் ஈரானிடம் எப்படியாவது சமாதானம் பேசி அங்கிருந்து எண்ணெய் வாங்கலாம் என்றும் அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்காவால் இந்த டீலிங்கையும் முடிக்க முடியவில்லை.

சோகம்

கிட்டத்தட்ட கடந்த 4 நாட்களாக கெஞ்சாத குறைவாக அமெரிக்கா உலக நாடுகளிடம் எண்ணெய் கேட்டு வருகிறது. ஈராக்கில் எண்ணெய் இருப்பதற்காக அங்கு போர் தொடுத்தது எந்த அமெரிக்காவோ அதே அமெரிக்காதான் தற்போது உலக நாடுகளிடம் எல்லாம் எண்ணெய் வேண்டி கெஞ்சும் நிலைக்கு சென்று உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளும் இத்தனை நாட்களாக பிக்பாஸ் போல வலம் வந்து கொண்டு இருந்த அமெரிக்காவை சுற்றவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக