Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 மார்ச், 2022

தக்காளி பாஜி


உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறார்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் வீட்டில் வெங்காயம், தக்காளி மற்றும் சில மசாலா பொடிகள் இருந்தால், எளிய முறையில் ஒரு சைடு டிஷ் செய்யலாம். இதன் பெயர் தக்காளி பாஜி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கு ஏற்ற சைடு டிஷ் ரெசிபி.

தேவையான பொருட்கள்: 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 

கரம் மசாலா - 2 டீஸ்பூன் 

உப்பு - சுவைக்கேற்ப 

அரைப்பதற்கு... 

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 2 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 

பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி விட வேண்டும். 

அதன் பின் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், தக்காளி பாஜி தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!