Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 மார்ச், 2022

பூமியில் மிகவும் கொடூரமான ஐந்து உயிரினங்கள்... வாங்க பார்க்கலாம் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------
ஹவுஸ் ஓனர் : காலிங்பெல் ரிப்பேர் பார்க்க பலமுறை சொல்லியும் ஏன் வரல?
காமெடியன் : நான் பலமுறை வந்து காலிங்பெல் அடிச்சும் நீங்க கதவு திறக்கலையே சார்!!
ஹவுஸ் ஓனர் : 😐😐
---------------------------------------------
மனைவி : இன்னைக்கு சன்டே. வாங்க வெளிய போயிட்டு வரலாம். நான் தான் காரை ஓட்டுவேன். சரியா?
கணவன் : அதாவது கார்ல போயிட்டு ஆம்புலன்ஸ்ல திரும்பி வரலாம்னு சொல்றியா?
மனைவி : 😖😖
---------------------------------------------
அட அப்படியா?
---------------------------------------------
பூமியில் மிகவும் கொடூரமான ஐந்து உயிரினங்கள்...

🐟 ஆஸ்திரேலியன் 'பாக்ஸ் ஜெல்லி" மீன்கள்.

🐃 ஆப்பிரிக்க காடுகளில் உள்ள 'கேப்" என்ற எருமை.

🐊 ஆஸ்திரேலிய 'கடல் முதலை".

🐸 தென் ஆப்பிரிக்காவின் 'விஷ அம்புத் தவளை".

🐬 பசுபிக் பெருங்கடலில் உள்ள 'வெள்ளைச் சுறா".
---------------------------------------------
சின்ன சின்ன குறிப்புகள்...!!
---------------------------------------------
காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.

கேஸ் அடுப்பை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க.... அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால் அடுப்பு, மேடை இரண்டுமே பளிச் பளிச்.

சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும்.
---------------------------------------------
சிறந்த வரிகள்...!!
---------------------------------------------
அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும் பொறுக்காது.

முடிந்ததை நினைப்பவன் மனிதன், நினைத்ததை முடிப்பவன் இறைவன்.

பணம் வாழ்வின் லட்சியமாகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும், செலவழிக்கப்படும். அதைத் தேடும்போதும் செலவு செய்யும்போதும் தீமை பயக்கும்.

அரும்பெரும் செயல்களைச் செய்ததும், செய்யப்போவதும் தன்னம்பிக்கையே.

பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.

பொய்மை எளிதானது, உண்மை மிகவும் கடினமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக