Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 மார்ச், 2022

டிவிஎஸ் எக்ஸ்எல்லையே தோக்கடிச்சிடும் போல! Indian eFTR இ-பைக் அறிமுகம்! விலை கம்மினு மட்டும் நெனச்சுடாதீங்க!

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle) நிறுவனம், இ-எஃப்டிஆர் ஹூலிகன் (eFTR Hooligan) எனும் புதுமுக இ-பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle) நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இ-எஃப்டிஆர் ஹூலிகன் (eFTR Hooligan) என்ற பெயரில் வெளியீட்டைப் பெற்றிருக்கும் அந்த வாகனம் பற்றிய முழு விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), மின் வாகன துறையில் தனது பங்களிப்பை தரும் விதமாக ஓர் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரை உருவாக்கியிருக்கின்றது. இ-எஃப்டிஆர் ஹூலிகன் (eFTR Hooligan) என்ற வாகனத்தையே நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதையே தற்போது உலகளவில் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இவ்வாகனத்திற்கு 4 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் கணக்கிட்டால் இதன் விலை 3 லட்ச ரூபாயைத் தாண்டும். இத்தகைய விலையுயர்ந்த பைக்காகவே இ-எப்டிஆர் ஹூலிகன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மொபட் உருவத்தில் பைக்குகளின் டயரைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இ-பைக்கை பெடலாலும் இயக்க முடியும். இந்த பெடல் அசிஸ்ட் வாயிலாக 120 கிமீ வரை செல்ல முடியும். இந்த உச்சபட்ச ரேஞ்ஜை வழங்குவதற்காக இ-பைக்கில் 960 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை கழட்டி மாட்டிக் கொள்ள முடியும்.

இத்துடன், வெவ்வேறு இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு மூன்று விதமான ரைடிங் மோட்கள் இ-பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. கிளாஸ் 1 மோட், கிளாஸ் 2 மோட், கிளாஸ் 3 மோட் ஆகியவையே அவை ஆகும். முதல் மோடில் பெடல் அசிஸ்ட் அம்சத்துடன் மணிக்கு 32 கிமீ வேகத்திலும், இரண்டாவது மோடில் மணிக்கு 32கிமீட்டருக்கும் அதிகமான வேகத்திலும் இ-பைக்கை இயக்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவது மோடான கிளாஸ் 3 மோடில் உச்சபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இத்துடன், ஆஃப் ரோட் மோடும் வழங்கும் இந்தியன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது 45 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வாகனத்தை செல்ல வைக்க உதவும்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இவ்வாகனத்தை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சூப்பர் 73 எனும் நிறுவனத்துடன் இணைந்தே உருவாக்கியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பிரபல மாடலான சூப்பர் 73 எஸ்2 மாடலைத் தழுவியே இது உருவாக்கப்ட்டிருக்கின்றது. மின் விளக்கு, ஃப்ளையிங் ஸ்கிரீன் போன்ற அம்சங்கள் அந்த வாகனத்தில் இருந்தே பெறப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், இ-எஃப்டிஆர் ஹூலிகன் இ-பைக்கின் தோற்றம் தனுத்துவமானதாக காட்சியளிக்கின்றது. பென்ச் போன்ற அமைப்புடைய இருக்கை, மிடில் பகுதியில் பொருத்தப்பட்ட பேட்டரி மற்றும் குண்டான டயர்கள் உள்ளிட்டவை வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்று இன்னும் பன்முக சிறப்பு வசதிகள் இ-எஃப்டிஆர் ஹூலிகன் இ-பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இதனை மிக மிக விரைவில் உலக சந்தையில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆனால், இந்தியாவிற்குக் கொண்டு வரப்படுமா என்பது தெரியவில்லை.

மேலும், இதன் அறிமுகத்தின் வாயிலாக நிறுவனம் மின் வாகன சந்தையில் தனது இருப்பை உறுதிப்படுத்த இருக்கின்றது. இதேபோல் மிக சமீபத்தில் யமஹா மற்றும் டுகாட்டி போன்ற முன்னணி நிறுவனங்களும் அதன் எதிர்கால தயாரிப்புகள் பற்றிய தகவலை வெளியிட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக