Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 7 மார்ச், 2022

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை

இந்த கோயில் எங்கு உள்ளது?

திருவண்ணாமலை நகரின் மத்தியில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திருவண்ணாமலை நகரின் மத்தியில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதி உள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கமே மலையாக அமைந்த மலை. தென்னிந்தியாவிலேயே 2வது உயரமான கோபுரம் (217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம் இத்திருக்கோயில் ஆகும்.

பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலம் ஆகும்.

மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் மலையை சுற்றி கிரிவலம் செல்லுதல் மிகவும் சிறப்பு.

வேறென்ன சிறப்பு?

இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும்.

மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும். இது அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும்.

மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவுப்படுத்தும்.

மலையை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம், கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி, தை மாதம் மாட்டுப்பொங்கல், திருவூடல் உற்சவம், சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம், மாதந்தோறும் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள் நடைபெறும்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கல்யாணம், குழந்தை பாக்கியம், வியாபாரத்தில் விருத்தியடைய, உத்தியோக உயர்வு, வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

வேண்டுதல் நிறைவேறியவர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர்.

குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகின்றனர்.

இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!