Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

வயிறு வலிக்கு இதான் காரணமா.. அப்போ... தலை வலிக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------
சரவெடி காமெடிகள்...!!
---------------------------------------------
மாணவன் : சார் வயிறு வலிக்குது சார்.
ஆசிரியர் : வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான் வலிக்கும்.
மாணவன் : அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்களே!
ஆசிரியர் : 😕😕
---------------------------------------------
மனைவி : மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மேக்கப் போட்டது வீணாபோச்சு..
கணவன் : ஏன் என்ன ஆச்சு?
மனைவி : பரிசு கிடைக்கவில்லை.
கணவன் : என்ன வேசம் போட்ட?
மனைவி : பத்ரகாளி வேசம்
கணவன் : மேக்கப் போடாம போயிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.
மனைவி : 😡😡
---------------------------------------------
பாரதி பாட்டு...!!
---------------------------------------------
வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா!
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா!

இணைவாய் எனதா வியிலே - கண்ணா!
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!

எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவிக் கினியா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழும்வா னவனே!
---------------------------------------------
இன்றைய புதிர்கள்...!!
---------------------------------------------
🤔 முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். முதல் எழுத்துடன் அடுத்த இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். இறுதி இரண்டு எழுத்துக்கள் வினா சொற்களைக் குறிக்கும். இம்மூன்று புதிர்களும் சேரக் கிடைப்பது. தமிழ்க்கவிஞர்களில் ஒருவரின் பெயர். யார் அவர்? 

விடை : 👳 பாரதியார்

🤔 முதல் மூன்று எழுத்துக்கள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. இறுதி மூன்றெழுத்துக்கள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர். இவ்விரண்டும் சேர்ந்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர். அது எந்த ஊர்? 

விடை : 🏰 பட்டுக்கோட்டை

🤔 முதல் நான்கு எழுத்துக்கள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும். இறுதி இரண்டு எழுத்துக்களைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும். அது என்ன? 

விடை : 🌲 மூங்கில்காடு

🤔 முதல் இரண்டு எழுத்துக்கள் உறங்குவதற்கு உதவுவது. இடையில் உள்ள மூன்றெழுத்துக்கள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. இறுதி நான்கு எழுத்துக்கள் கடலில் பயணிக்க உதவுவது. அது என்ன?

விடை : 🚢 பாய்மரக்கப்பல்

🤔 முதல் இரண்டு எழுத்துக்கள் மாணவர் கைகளில் தவழ்வது. இறுதி மூன்று எழுத்துக்கள் புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல். அது என்ன? 

விடை : 📚 நூலகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக