ஆக நாம் இன்று பார்க்கவிருப்பது தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஏடிஎம்(ATM) கார்டின் எக்ஸ்பெய்ரி தேதி முடிவடைந்த பின் என்ன செய்வது?
எப்படி புதிய கார்டினை பெறுவது? அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? இதற்கு எப்படி அப்ளை செய்வது? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அப்ளை செய்ய வேண்டியதில்லை
இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யின் ஏடிஎம் கார்டு எக்ஸ்பெய்ரி தேதி முடிவடைகிறது எனில், அதற்காக நீங்கள் புதியதாக அப்ளை செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வங்கியே உங்களது வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிக்கு புதிய கார்டினை அனுப்பி வைப்பார்கள். அதுவும் மூன்று மாதத்திற்கு முன்பே அனுப்பி வைப்பார்கள்.
எந்த முகவரி?
இந்த கார்டானது நீங்கள் எந்த வகையான கார்டினை பயன்படுத்துகிறீர்களோ? அந்த கார்டே திரும்ப கிடைக்கும். அதே போல உங்களுக்கு புதிய ஏடிஎம் கார்டு கையில் கிடைத்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வரும். ஒரு வேளை நீங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட முகவரி இல்லை. தற்போது வேறு முகவரியில் இருக்கிறீர்கள் எனில், உங்களது ஏடிஎம் எக்ஸ்பெய்ரிக்கு முன்பே வங்கியை அணுகி புதிய முகவரியினை அப்டேட் செய்து, அதன் பிறகு புதிய ஏடிஎம் கார்டினை பெற்றுக் கொள்ளலாம்.
கார்டினை பிளாக் செய்யணுமா?
சரிங்க?. பழைய ஏடிஎம் கார்டுக்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டும் வந்து விட்டது. அப்படி யெனில் பழைய கார்டினை என்ன செய்வது எனில், உங்களது புதிய கார்டினை நீங்கள் பயன்படுத்த தொடங்கி விட்டாலே, உங்களது பழைய கார்டு செயல்படாது. அதாவது உங்களது பழைய கார்டின் எக்ஸ்பெய்ரி தேதிக்கு பிறகு உங்களது கார்டு செயல்படாது. ஆக இதனால் உங்களுக்கு வேறு எந்த பிரச்சனையும் இருக்காது.
கட்டணம் உண்டா?
அதெல்லாம் சரி இவ்வாறு விண்ணப்பிக்கும் புதிய கார்டுக்கு ஏதேனும் கட்டணம் உண்டா? நிச்சயம் கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனை நீங்கள் ஆன்லைனில் கார்டு எக்ஸ்பெய்ரி தேதி முடிவடையும் முன்பே அப்டேட் செய்தும் கொள்ளலாம்.
எப்படி ஆன்லைனில் ரினீவ் செய்வது?
இதற்காக நீங்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, அவர்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் மெனு பாரில் உள்ள e- Services என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் ATM Card Services என்பதை கிளிக் செய்யவும்.
இதனை நீங்கள் பதிவு செய்த பிறகு அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் Request ATM./Debit card என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அதனை கொடுத்த பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதன் பிறகு உங்களது ஓடிபி எண்ணினை ஸ்கீரினில் பதிவு செய்யவும்.
அடுத்ததாக உங்களது பெயருடன் கூடிய கார்டு வகையினை தேர்தெடுக்க வேண்டும். அதன் பிறகு Terms & Conditions என்பதை Accept கொடுக்கவும்.
அதனை கொடுத்த பிறகு இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களது முகவரி இருக்கும். ஆக உங்களது முகவரி சரியானது தானா? என்பதையும் உறுதி செய்யவும். அதனை கொடுத்த பிறகு 7 வேலை நாட்களில் உங்களது முகவரிக்கு ஏடிஎம் கார்டு கிடைக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக