கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கை வகித்துள்ளன. மாஸ்க் அணிதல், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸ் ஒன்றை செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும், சீனா, ஐரோப்பிய நாடுகளில் பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸை செலுத்த, மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் போடுவதை பரவலாக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் பூஸ்டர் டோஸ் போடுவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக