-----------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-----------------------------------------------------
பாபு : உங்க தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும் டபுள்ரேட் சொல்றீங்களே, ஏன்?
கோபு : வயலுக்கு தண்ணி பாய்ச்சறது கூட மினரல் வாட்டர்தான்..!
பாபு : 😮😮
சுரேஷ் : நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!
ரமேஷ் : இப்படி கூட செய்வாங்களா?
சுரேஷ் : இங்க பாருங்க... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!
ரமேஷ் : 😂😂
-----------------------------------------------------
காதலர் தின ஸ்பெஷல்...!!
-----------------------------------------------------
நரகாசுரனை கொன்றால் தீபாவளி...!
தினம் தினம் பார்வைகளாலயே
என்னை நீ கொல்வதை
என்ன பெயரிட்டு அழைப்பது
என்றேன் நான்...!
மொக்கை கவிதை சொல்லியே
தினமும் என்னை கொல்கிறாயே
அதற்கு என்ன பெயரோ
அதேதான் இதற்கும்
என்றாள் அவள்...!!😎😎
-----------------------------------------------------
கண்டுபிடி... கண்டுபிடி...!!
-----------------------------------------------------
1. நான் ஓர் அழகு தேவதை, ஆடும் தேவதை. நான் யார்?
2. வளைவேன், நெளிவேன், வயிறு கலங்க வைப்பேன். நான் யார்?
3. மரத்திற்கு மரம் தாவுவேன். முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன். நான் யார்?
4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன். ஓடையிலே மீன் பிடிக்கிறேன். நான் யார்?
5. பகலில் துயில்வேன். இரவில் அலறுவேன். நான் யார்?
விடை கீழே...👇👇
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------------------
😌 பகிர்ந்து கொள்ளாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
😌 நேரத்திலும், நேர்மையாக இருப்பதிலும் கவனமாக இருங்கள். தவற விட்டுவிட்டால் மறு வாய்ப்பு கிடையாது.
😌 பயந்து நடக்காதீர்கள். கிடைத்த வாய்ப்பும் தொலைந்து போகும். துணிந்து செல்லுங்கள் வந்த துன்பமும் விலகி போகும்.
-----------------------------------------------------
பாரதி பாட்டு...!!
-----------------------------------------------------
'பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே"
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே
ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயாலே
-----------------------------------------------------
விடை :
-----------------------------------------------------
🐦 மயில்
🐍 பாம்பு
🐿 அணில்
🦆 கொக்கு
🦉 ஆந்தை
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக