>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 ஏப்ரல், 2022

    யு.கே.ஜி படிச்சிட்டு என்ன வேலைக்கு போகலாம்? சிரிக்கலாம் வாங்க

    ----------------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    ----------------------------------------------------
    யு.கே.ஜி. மாணவன் : நான் ஸ்கூலுக்கு போகல, வேலைக்குப் போறேன்.
    அம்மா : யு.கே.ஜி படிச்சிட்டு என்ன வேலைக்குடா போவ?
    யு.கே.ஜி. மாணவன் : எல்.கே.ஜி. புசைடள-க்கு டியூசன் எடுப்பேன்.
    அம்மா : 😂😂
    ----------------------------------------------------
    படித்ததில் பிடித்தது...!!
    ----------------------------------------------------
    💥 உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு.

    💥 சந்தோஷத்தைத் தேடாதே, ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு.

    💥 குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்... பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம்.

    💥 உங்களை நீங்களே மதிப்பது ஆணவம். பிறர் உங்களை மதிப்பது பெருமை!

    💥 நண்பர்களை பெற்றிருக்கும் யாரும் பயனில்லாத மனிதனில்லை.
    ----------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    ----------------------------------------------------
    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

    பொருள் :

    கேட்காத செவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
    ----------------------------------------------------
    எறும்புகளை விரட்ட 6 ஹோம் டிப்ஸ்..!
    ----------------------------------------------------

    சாக்பீஸ் :

    🐜 சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எறும்புகள் வராது. எனவே எறும்புகள் இருக்கும் இடத்தில் சாக்பீஸால் கோடு போடுங்கள்.

    எலுமிச்சை :

    🐜 எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள் அல்லது எலுமிச்சை தோலை வையுங்கள்.

    மிளகு :

    🐜 மிளகின் நெடி எறும்புகளுக்கு பிடிக்காது என்பதால் இதை டிரை பண்ணுங்க.

    உப்பு :

    🐜 எறும்புகள் நுழையும் இடம் மூலை முடுக்குகளில் உப்பை தூவினால் வராது.

    வினிகர் :

    🐜 தண்ணீர் மற்றும் வினிகர் இரண்டையும் சம அளவில் கலந்து எறும்பு வரும் இடத்தில் தெளித்துவிடுங்கள்.

    பட்டை :

    🐜 பட்டை அல்லது கிராம்பு பொடிகளை தூவினாலும் எறும்பு வராது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக