மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எஸ்ப்ளோரர் பிரவுசரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பெரும்பாலான மக்களுக்கு, இணையத்துடனான முதல் முயற்சியானது இன்டர்நெட் எஸ்ப்ளோரர் மூலம் தொடங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் எஸ்ப்ளோரர் பிரவுசரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
நீண்ட காலமாக பிரவுசிங் செய்யும் பொதுமக்களால் இந்த விருப்பம் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தான் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்தவுள்ளது.
வரும் ஜூன் 15, 2022 ஆம் தேதி இதன் சேவையை முழுமையாக நிறுத்த போவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பை, கடந்த ஆண்டு தனது வலைப்பதிவின் மூலம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசர் ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்முறையில் ("ஐஇ மோட்") உள்ளமைக்கப்பட்டு இருப்பதால், யூசர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்களையும் பயன்பாடுகளையும் மைக்ரோசாஃப்ட் எட்ஜிலிருந்து நேராக அணுகலாம் என்று மைக்ரோசாஃப்ட் எட்ஜ் நிரல் மேலாளர் சீன் லிண்டர்சே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் சிலவற்றை அவர் கூறினார். அதில் "விண்டோஸ் 10-இல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்த விரும்பினால் அதை மைக்ரோசாஃப்ட் எட்ஜில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் பயன்பாடு நிறுத்த உள்ளோம் என்றும், விண்டோஸ் 10'இன் சில பதிப்புகளுக்கு ஜூன் 15, 2022 அன்று ஆதரவு இல்லாமல் போகும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், விண்டோஸ் 8.1, விண்டோஸ் 7 ESU, விண்டோஸ் SAC அல்லது விண்டோஸ் 10 IoT LTSC உள்ளிட்ட பிற விண்டோஸ் பதிப்புகளில் இன்டர்நெட் எஸ்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் பயன்பாடுகள் மாறாமல் அப்படியே இருக்கும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு நீண்ட காலமாக உள்ளது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் வெப் பயன்பாட்டிற்கான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 வெர்ஷனுக்கான ஆதரவையும், கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் 365 சேவைகளின் ஆதரவையும் மைக்ரோசாப்ட் நிறுத்தியது.
ஆகஸ்ட் 17, 2022 அன்று ஆபீஸ் 365, ஒன் டிரைவ், அவுட் லுக் போன்ற மைக்ரோசாப்ட்'இன் ஆன்லைன் சேவைகளுக்கு இன்டர்நெட் எஸ்புளோரர் 11 ஆதரவு ஏற்கனவே கைவிடப்பட்டது.
நீங்கள் இன்டர்நெட் எஸ்ப்ளோரரின் பிரத்யேக ரசிகராக இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் IE பயன்முறையில் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை இனி அறிந்து கொள்ளுங்கள்.
இதற்கு முதலில் விண்டோஸ் 10'இல் மைக்ரோசாப்ட் எட்ஜை திறந்து, மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ்-இற்கு செல்லவும். அடுத்து செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள டிஃபால்ட் பிரவுசரில் கிளிக் செய்யவும்.
இப்போது, "Internet Explorer compatibility" டேப்'ஐ தேடி, "“Allow sites to be reloaded in Internet Explorer mode” என்பதை மாற்றி, ரீஸ்டார்ட் என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு எட்ஜ் செட்டிங்ஸ் மெனுவிற்குச் சென்று, இடது கை மெனுவில் உள்ள "புரொபைல்" தலைப்புக்குச் சென்று எட்ஜை உங்கள் முதன்மை பிரவுசராக மாற்றலாம்.
அடுத்தாக, “Import browser data” என்பதைத் டேப் செய்யவும். இதில் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதோ நீங்கள் மைக்ரோசாப்ட் எட்ஜ் IE மோட்-ஐ பயன்படுத்தத் தயாராகி விட்டீர்கள்
உள்ளூர் முதல் உலகம் வரை
,
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக