Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மே, 2022

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவரா நீங்கள்..? மேக்கப் பிரெஷ்களை சுத்தம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..!


யாருக்கு தான் மேக்கப் செய்ய பிடிக்கது? மேலும் பெண்கள் மட்டுமே மேக்கப் செய்யும் காலம் மலை ஏறிவிட்டது. தற்போதெல்லாம், ஆண்களும் கூட தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொள்பவர்களாக மாறி வருகின்றனர். எனவே மேக்கப் என்றதும் அது பெண்களுக்கான டாப்பிக் என்று ஒதுங்குவது இனிமேலும் செல்லுபடியாகாது.

அது ஒருபக்கம் இருக்க பொதுவாக மேக்கப் செய்யும் அனைவருமே சில நேரங்களில் தோல் வெடிப்புக்கு (skin breakouts) வழிவகுக்கும் சில விஷயங்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக உங்கள் தோல் மிகவும் உணர்திறன் கொண்டதாக, அதாவது சென்சிடிவ் ஆக இருக்கும் போது!

தோல் வெடிப்புக்கு நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் பிரெஷ்களும், பயன்பாட்டிற்குப் பிறகு அதை எவ்வாறு சுத்தம் செய்கிறீர்கள் மற்றும் அதை எவ்வாறு 'ஸ்டோர்' செய்து வைக்கிறீர்கள் என்பதை பொறுத்தே அது பல வழிகளில் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது.

இதுபோன்ற சேதத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, வாரத்திற்கு ஒரு முறை உங்கள் மேக்கப் பிரெஷ்களை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். அப்படியாக உங்கள் பிரெஷ்களைக் கழுவும்போது / சுத்தம் செய்யும் போது நீங்கள் மனதில் கொள்ளக்கூடிய சில முக்கியமான குறிப்புகளை தான் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

ஆன்டி-பாக்டீரியல் லிக்விட்-ஐ பயன்படுத்தவும்

சில நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு, உங்கள் மேக்கப் பிரெஷ்கள் 'ஆய்லி' ஆக மாறலாம். இந்த இடத்தில், சந்தையில் கிடைக்கும் ஆன்டி-பாக்டீரியல் வாஷிங் லிக்விட்-ஐ பயன்படுத்தி பிரஷில் உள்ள எண்ணெயை அகற்றுவது அவசியம். வெதுவெதுப்பான நீரில் லிக்விட்-ஐ கலந்து பிரெஷ்-ஐ ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

நோ-ரின்ஸ் லிக்விட்-ஐ பயன்படுத்தவும்

மேக்கப் பிரெஷ்-ஐ சுத்தம் செய்ய, பல ஒப்பனை கலைஞர்கள் ரின்ஸ் லிக்விட்-ஐ பயன்படுத்துவதில்லை. எனவே நோ-ரின்ஸ் லிக்விட்-ஐ சிறிது எடுத்து பிரெஷ்ஷின் மேற்புறத்தை அதில் நனைக்கவும். இப்போது டிஷ்யூ பேப்பர் அல்லது டவல் கொண்டு பிரெஷை சுழற்றி சுத்தம் செய்யவும். பிரெஷ் காய்ந்த பிறகு அதைப் பயன்படுத்தவும்.

ஆல்கஹால் லிக்விட்-ஐ தவிர்க்கவும்

உங்களுக்கு மிகவும் சென்சிடிவ் ஆன சருமம் இருந்தால், ஆல்கஹால் சார்ந்த லிக்விட்-ஐ கொண்டு உங்கள் பிரெஷ்-ஐ சுத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில் இது உங்கள் தோலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த இடத்தில் உங்கள் பிரெஷ்-ஐ சுத்தம் செய்ய வழக்கமான சோப்பைப் பயன்படுத்தலாம்.

ஷாம்பு பயன்படுத்தலாம்

மேக்கப் பிரெஷ்களை சுத்தம் செய்வதற்கு நீங்கள் ஷாம்புவையும் பயன்படுத்தலாம். பிரெஷ்ஷை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூவுடன் சேர்த்து ஊற வைக்கவும். 5-10 நிமிடங்களுக்குப் பிறகு பிரெஷ்-ஐ சுத்தமான தண்ணீரில் கழுவவும்; அவ்வளவு தான்!

(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இவற்றைச் செயல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக