பொது நீச்சல்குளத்தில் காணப்படும் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலமாக RWI என்ற தொற்று நோய் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தொற்று நீச்சல்குளத்தில் உள்ள நீரை விழுங்குவது, குளிப்பது அல்லது அதன் நீராவியை சுவாசிப்பதன் மூலமாக பரவக்கூடும். நீச்சல் குளங்களில் இருந்து பொதுவாக தொற்று ஒரு வியாதி வயிற்றுப்போக்கு ஆகும்.
சராசரியாக, ஒரு நபரின் உடலில் எந்த நேரத்திலும் சுமார் 0.14 கிராம் மலம் இருப்பதாக கூறப்படுகிறது. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஒருவர் குளத்திற்குள் செல்லும்போது, அவர்களது மலம் குளத்தில் கலக்கவும், அது தண்ணீர் மூலமாக மற்றொருவருக்கு தொற்று நோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
பொது நீச்சல்குளத்தில் ஏற்படும் பிற தொற்றுநோய்கள்:
வயிற்றுப்போக்கை தவிர, தோல், காது சுவாசக்குழாய் மற்றும் கண் ஆகிய பகுதிகளிலும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கிரிப்டோஸ்போரிடியம், லெஜியோனெல்லா, சூடோமோனாஸ், நோரோவிரிஸ், ஷிகெல்லா, ஈ. கோலி மற்றும் ஜியார்டியா ஆகியவை நீச்சல் குளத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தும் பொதுவான உயிரினங்கள் மூலமாக இந்த நோய்கள் பரப்பப்படுகிறது.
நீச்சல் பயிற்சியில் ஈடுபடுக்கொண்டிருக்கும் ஒரு நபரின் காது துவாரங்கள் வழியாக உட்புகும் நீர், ஈரமான இடங்களில் வளரும் சில பூஞ்சைகள் காதுக்குள் வளர காரணமாகிறது. இந்த மோசமான பாக்டீரியா தொற்றால் மோசமான வீக்கம், வலி மற்றும் பயங்கரமான அரிப்பு ஏற்படலாம். நீச்சல் குளத்தின் நீரில் உள்ள லெஜியோனெல்லா என்ற பாக்டீரியாவை உட்கொள்வதால் சுவாச பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பெரும்பாலான நீச்சல்குளங்கள் குளோரின் அல்லது புரோமைனைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தப்படுகின்றன. இதன் ரசாயன அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் அது சுவாசக்குழாயில் எரிச்சல் மற்றும் தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதே சமயம் அளவாக பயன்படுத்தப்படும் குளோரின் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும்.
தொற்று நோய்களை தடுப்பது எப்படி?
* குளோரின் கலந்த நீரில் குளிப்பதற்கு முன்னதாக முடி மற்றும் கண்களை பாதுகாக்கும் விதத்தில் தொப்பி மற்றும் கண்ணாடி அணிய வேண்டும்.
* நீச்சலடிக்க குளத்திற்குள் இறங்கும் முன்பு உடலை ஈரமாக்கி சோப்பு மற்றும் ஷாம்பு கொண்டு சருமம் மற்றும் முடிகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
* நீச்சல் குளத்திற்குள் குதிப்பதற்கு முன்பு மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். மேலும் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது கிருமிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் , புற்றுநோயால் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் எச்ஐவி நோயாளிகள் ஆகியோர் பொது நீச்சல் குளத்தில் நீராடுவதை தவிர்ப்பது நல்லது. நீச்சல் தொடர்பான நோய்களுக்கு மிகவும் ஆபத்தில் உள்ளன."
நீச்சல் குளத்தில் இருந்து பூஞ்சை தொற்று ஏற்படுமா?
டெர்மடோஃபைடோசிஸ் மிகவும் பொதுவான பூஞ்சை தோல் நோய்த்தொற்று நோய் ஆகும். இது முக்கியமாக மனித மூலங்கள் மூலமாக பரவும் ஒரு தொற்று நோயாகும் மற்றும் நீச்சல் குளங்கள் மூலமாக இந்த தொற்று நோய் பிறருக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளது.
நீச்சல் குளத்தில் மூலம் ஏற்படும் சொறியின் அறிகுறிகள்?
பொது நீச்சல் குளத்தில் குளித்தவருக்கு சிவப்பு நிற பருக்கள், கொப்புளங்கள் ஆகியவை சொறியின் அறிகுறியாக சில நாட்கள் அல்லது சில மணி நேரங்களில் கூட ஏற்படலாம். ஸ்விம்சூட் அல்லது ஸ்விம்மிங் உடையால் மூடப்பட்டாத பாகங்களில் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நீச்சல் குளத்தை பராமரிப்பது எப்படி?
நீச்சல் குளத்திலுள்ள நீர் சுத்தமாக இருக்க வேண்டும்; இல்லையெனில் நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எந்த நீரை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை நீச்சல் குளத்தின் நீரை மறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியாக்கள் புழுக்களாக மாறி தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீச்சல் குளத்தை முறையாக பராமரிக்காவிட்டால், அது பல்வேறு விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களுக்கும் காரணமாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக