உலகம் முழுவதுமே, பெரும்பாலானவர்கள் இணையம் சார்ந்து தான் இயங்கி வருகிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அன்றாட தேவைகளில் இருந்து பொழுதுபோக்கு வரை எல்லாவற்றுக்குமே இணையம் சார்ந்த சேவைகள் பயனுள்ளதாக இருக்கிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதே வேகத்தில் ஆன்லைன் திருட்டு, ஹேக்கிங் என்று முறைகேடுகளும் அதிகரித்துதான் வருகின்றன. இணையம் பயன்படுத்தும் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாஸ்வேர்டு மற்றும் பல்வேறு விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக பல பல தொழில்நுட்ப சேவை நிறுவனங்களும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்களுக்கான பயனர் விதிமுறைகளை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு அதை மீறும் கணக்குகளை ஒவ்வொரு மாதமும் ப்ளாக் செய்து வருகிறது.
யூசர்களின் பிரைவசியை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் ட்விட்டர் நிறுவனம் தனது யூசர்களின் டேட்டாவை விற்பனை செய்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டருக்கு 150 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.
டிவிட்டர் நிறுவனம் தனது யூசர்களுடன் மேற்கொண்டுள்ள விதிமுறைகளை மீறியுள்ளது என்று ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இரண்டுமே ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது ட்விட்டரில் ஒரு நபர் சைன்-இன் செய்து பயன்படுத்த தொடங்கும் போது அவருடைய தனிப்பட்ட விவரங்களான தொலைபேசி எண் ஈமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களை எந்தவித விளம்பரதாரர்களுக்கும் கொடுக்க மாட்டோம் என்று ட்விட்டர் அக்ரீமென்ட்டில் உள்ளது.
ஆனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டர் இந்த விதியை டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு மீறியுள்ளது என்று ஃபெடரல் இன்வெஸ்டிகேட்டர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் ஜிடிபிஆர் டேட்டா பிரைவசி விதிகளை ட்விட்டர் மீறியதற்காக அப்பொழுதே நான்கு லட்சம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்பொழுது அமெரிக்கா அரசின் தனிப்பட்ட ஏஜென்சியான FTC மேற்கொண்ட ஆய்வின்படி ட்விட்டர் மீண்டும் தனது யூசர்களின் தரவை விற்பனை செய்துள்ளது என்பது கண்டறியப்பட்டது.
ட்விட்டர் தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களில் இருந்துதான் டிவிட்டார் வருமானம் ஈட்டுகிறது. FTCயின் சார்பாக டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் 2013 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. ட்விட்டர் நிறுவனம் யூசர்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யை கோரியபோது இந்த வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அதற்கு ட்விட்டரின் சார்பாக யூசர்களின் பாதுகாப்புக்காகத்தான் நாங்கள் மொபைல் நல்லது இமெயில் ஐடியைக் கேட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு குறித்து தான் யூசர்களின் டேட்டாவை பெற்றோம் என்று கூறினாலும் அந்த டேட்டாவின் அடிப்படையில்தான் விளம்பரங்கள் காட்டப்பட்டன என்று FTCயின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் மூலம் விளம்பரங்கள் டார்கெட் செய்யப்பட்டு வந்ததை தொடர்ந்து, ட்விட்டரின் வருமானம் கணிசமாக அதிகரித்தது. மேலும் தற்போதும் அதன் அடிப்படையில்தான் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் ட்விட்டர் இதை தொடர்ந்து மறுத்து தான் வருகிறது. பின்னர் பல நிறுவனங்களும் அமலுக்கு கொண்டு வந்துள்ள டூ ஃபேக்டர் ஆத்தன்ட்டிகேஷன் முறையை ட்விட்டரும் அமல் படுத்தியது. இது யூசர்களின் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ட்விட்டர் வலியுறுத்தினாலும் இதன்மூலம் ட்விட்டரின் வருமானம் இன்னும் சில மடங்கு உயர்ந்துள்ளது என்பது எஃப்டிசியின் வாதம்.
அதைத் தொடர்ந்து, யூசர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை உறுதி செய்ததை அடுத்து, யூசர்களின் டேட்டாவை விற்பனை செய்த காரணத்துக்காக, $150 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த புகார் எவ்வளவு முக்கியமான விவரத்தை உறுதி செய்துள்ளது என்பதையும், இதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதிமுறைகளை நிறுவனங்கள் உடனே செயல்படுத்திட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக