Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூன், 2022

வேறு பெயரின் கீழ் மீண்டும் இந்தியாவிற்குள் வரும் TikTok - பக்கா பிளான் போடும் பைட் டான்ஸ்.!

டிக்டாக் ஆப்பின் "தாய் நிறுவனமான" பைட் டான்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைவதற்கான புதிய வழிகளைத் தேடுகிறது. டிக்டாக் உட்பட பல பிரபலமான தளங்களை வைத்திருக்கும் இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இதற்கிடையில், தி எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் பங்குதாரர்களைத் தேடுகிறது, அவர்கள் இந்நிறுவனம் சந்தையில் மீண்டும் நுழைய உதவுவதோடு, அதன் வளர்ச்சிக்காக பழைய மற்றும் புதிய ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தவும் உதவும்.

2020 ஆம் ஆண்டில் டிக்டாக் போன்ற ஆப்கள் சீனாவுடன் யூசர் டேட்டாவைப் பகிர்ந்ததாகக் கூறி இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பின்னர் பைட் டான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ஏற்கனவே யோட்டா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சொல்யூஷன்ஸ் மூலம் டேட்டா சென்டர் பிஸ்னஸில் இருக்கும் ஹிரானந்தனி குழுமத்துடன் பைட் டான்ஸ் பேசி வருகிறது

இதன் மூலம் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் அதன் வணிகத்தை மீண்டும் இந்தியாவில் இயங்கச் செய்ய லோக்கல் சொல்யூஷன்களை தேடுகிறது என்பதை அறிய முடிகிறது. எல்லாம் சாத்தியமாகும் பட்சத்தில், 2 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு டிக்டாக் ஆப் ஆனது மீண்டும் இந்திய சந்தைக்குள் வரக்கூடும்.

தி எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான அறிக்கையில், ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, பேச்சுவார்த்தைகள் இன்னும் முறையான கட்டத்தை எட்டவில்லை, ஆனால் அத்தகைய திட்டங்களை ஒன்றியம் அறிந்திருப்பதாகத் தெரிகிறது மற்றும் தேவையான ஒப்புதல்களுக்கான பிஸ்னஸ் மாடலை சரிப்பார்க்கும் என்று கூறி உள்ளார்.

இந்திய சந்தையில் பைட் டான்ஸ் மீண்டும் நுழைவதற்கு பார்ட்னர்ஷிப் மாடல் சிறந்த வழியாகும், இது நிறுவனத்தை உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்க அனுமதிக்கிறது, இதன் கீழ் அனைத்து யூசர் டேட்டாவையும் உள்நாட்டு சந்தையில் ஹோஸ்ட் செய்வதும் அடங்கும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பைட் டான்ஸ் ஆனது கிராஃப்டன் (Krafton) நிறுவனத்தின் உத்தியைப் பின்பற்றலாம், இது பப்ஜி மொபைலை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது, ஆனால் வேறு பெயர் மற்றும் கொள்கையுடன்! அதே பாணியை பைட் டான்ஸ் நிறுவனமும் பின்பற்றலாம், டிக்டாக்கை மீண்டும் இந்தியாவில் உள்ள யூசர்களுக்கு கொண்டு வருவதற்கு முன் அதை மறுபெயரிடுவதையும் கருத்தில் கொள்ளலாம்.

பைட் டான்ஸ் சந்தையில் மீண்டும் நுழைவதைப் பற்றிய செய்தி மற்ற தொழில்துறைக்கு உற்சாகத்தைத் தரும், ஏனெனில் இந்நிறுவனம் உள்ளூர் ஊழியர்களை கொண்டே அதன் செயல்பாடுகளை அதிகரிக்கும். டிக்டாக், நாட்டில் தடை செய்யப்பட்டபோது, ​சிங்கரி, எம்எக்ஸ் டக்கா தக் மற்றும் ரீல்ஸ் போன்ற தளங்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டதே டிக்டாக் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, டிக்டாக் மீண்டும் திரும்பும் பட்சத்தில் அது மீண்டும் கொடிக்கட்டி பறக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக