>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 11 டிசம்பர், 2020

    திருஆப்புடையார் கோவில், திருஆப்பனூர் - மதுரை

     திருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில் | Thiru  appudaiyar temple Madurai - Tamil Oneindia


    இறைவர் திருப்பெயர் : ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர்,
    இறைவியார் திருப்பெயர் : குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை,
    தீர்த்தம் : இடபதீர்த்தம், வைகை நதி,
    தல விருட்சம்: கொன்றை மரம்,
    தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

    தல வரலாறு:

    இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி வழிப்பட்டு வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு அடியார்க்கும் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இந்த தலத்து அன்னை குறவங் குழலம்மையை மனதார நினைத்து வணங்கிட, திருமண வாழ்வு மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் . இருவரையும் ஒரு சேர நினைத்து வேண்டிட, “கல்வி வரம், எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

    இத்தலத்தில் அர்ச்சகர் உலையிலிட்ட ஆற்று மணலை இறைவன் அன்னமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.இத்தல இறைவனார், சிவபக்தர் ஒருவருக்காக மணலை அன்னமாக்கியதால் அன்னவிநோதர் என அழைக்கப்பட்டார்.

    ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.

    இத்திருத்தலத்திற்கு கந்தசாமிப் புலவர் இயற்றிய தலபுராணம் உள்ளது. மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும். பாண்டிநாட்டு பாடல் பெற்ற தலம்.

    சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சிவபக்தன். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை வேட்டையாட காட்டிற்குச் சென்ற அரசன் வேட்டையாடிய களைப்பால் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, "மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,"' என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில் இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உணமையானால் இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால் உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது.

    ஒருமுறை பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி தவித்தனர். ஆப்புடையார் கோவில் அர்ச்சகர் சிவபூஜைக்காக சிறிது பயிர் செய்து நைவேத்யம் செய்து வந்தார். ஊர் மக்கள் உணவின்றி வாடும் போது இறைவனுக்கு நைவேத்யமா என்று சிலர் அர்ச்சகரை துன்புறுத்தினர். எஓவில் அர்ச்சகர் வருத்தப்பட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அசரீரியாக வைகை ஆற்று மணலை உலையிலிட்டு சமைக்கும் படியும் அது அன்னமாக மாறும் என்றும் அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகரும் அவ்வாறே செய்து ஊர் மக்களின் பசியைப் போக்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு "அன்னவிநோதன்" என்ற பெயர் ஏற்பட்டது.

    பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவர் ஒரு சிவபக்தர். இவர் உலகில் உள்ள எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ச்சியடைந்த ஆப்புடையார் தாயார் சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

    உலக செல்வங்களுக்கு அதிபதியாகிவிட்டதால் கர்வம் கொண்டு செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும் பார்வையை பெற்றார். ஆப்புடையார் இவரை குபேரன் என்று அழைத்து மீண்டும் நல் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்க நிதி பதும நிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வருகிறார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.

    இவ்வாலயத்திற்கு கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஈபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகம் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைத்தவடம் காணப்படமு மண்டபத்திர் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்ந்திக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பை சோமஸ்கந்த அமைப்பு என்பர். பிரகாரம் சுற்றி வரும்போது தலவிருடசம் வன்னி மரத்தடியில் விநாயகர் தரிசனம் தருகிறார். வள்ளி தெய்வானை அருகிலிருக்க முருகர் மயில் அமர்ந்து காட்சி தருகிறார்.

    இத்தலத்தில் கல் சிற்பமாக நடராஜர், சிவகாமி, அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலாவுருவங்கள் இத்தலத்தின் சிறப்பம்சம். உற்சவர் நடராஜரும் சிவகாமியுடன் உள்ளார். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.


    போன்:
     

     +91 452 253 0173, 94436 76174

    அமைவிடம் மாநிலம் :
    தமிழ் நாடு இந்த சிவஸ்தலம் கோவில் மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.

    இங்குள்ள ஈஸ்வரனை வணங்கி வழிப்பட்டு வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு அடியார்க்கும் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும்.

    பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது.



     குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக