>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 7 ஜூன், 2022

    யானையும், 🐜எறும்பும்... சிரிச்சு😆 வயிறு வலிச்சா... நாங்க பொறுப்பில்லை

    ---------------------------------------------------
    கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!
    ---------------------------------------------------
    பையன் : அப்பா, அப்ளிகேஷன்ல மதர் டங்குனு இருக்கே என்ன எழுதுறது? 
    அப்பா : ரொம்ப நீளம்னு எழுது...
    பையன் : 😂😂
    ---------------------------------------------------
    இது எப்படி இருக்கு?
    ---------------------------------------------------
    ஒரு குளத்தில் 25 🐜எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம்.

    குளத்துல டபக்கு-ன்னு ஒரு 🐘யானை குதிச்சிதாம்.

    குதிச்ச வேகத்துல 24 🐜எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம்.

    ஒரு 🐜எறும்பு மட்டும் 🐘யானை தலையில ஏறிடுச்சாம். 

    அப்போ 24 🐜எறும்புகளும் கோரசா சொல்லுச்சாம்.

    அந்த 🐘யானைய அப்படியே தண்ணியில முக்கி முக்கி விளையாடு-டா மாப்ள...!😂😂
    ---------------------------------------------------
    மாவீரர் அலெக்சாண்டர்...!!
    ---------------------------------------------------
    🤺 மரணத் தருவாயில் அலெக்சாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். 

    1. என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

    2. நான் இதுவரை சேர்த்த பணம், தங்கம், விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.

    3. என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.

    தளபதிகளில் ஒருவர் அலெக்சாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

    🤺 அதற்கு அலெக்சாண்டரின் பதில்!

    1. தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக..

    2. நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக...!

    3. எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்...!

    நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய நேரம் மட்டுமே. உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக