திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மணி அடித்தால் மலைப்பாம்பு நிற்கும், அது என்ன 🤔?

---------------------------------------
கடி ஜோக்ஸ்!!
---------------------------------------
பாபு : அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!
கோபு : முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?
பாபு : உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கோங்களேன்.
கோபு : 😂😂
---------------------------------------
ரமேஷ் : மச்சி எனக்கும் என் ஆளுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு டா..
சுரேஷ் : டே மாப்பிள்ள சொல்லவே இல்லை, எப்போ டா..
ரமேஷ் : எனக்கு இந்த மாசம்... அவளுக்கு அடுத்த மாசம்...
சுரேஷ் : 😮😮
---------------------------------------
இது சிரிப்பதற்காக மட்டுமே..!!
---------------------------------------
🌟 தினமும் காலைல வெறும் வயிற்றில் ஏழு எறும்புகளை உயிருடன் பிடித்து பல்லில் படாமல் விழுங்கி வந்தால் உடலில் சர்க்கரை அளவு குறையும். 

🌟 நான் கூறுவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வீட்டில் இருக்கும் சர்க்கரையை கீழே கொட்டி விட்டு அதுமேல் எறும்புகளை மேய விடுங்க. சர்க்கரை குறையலனா என்கிட்ட வந்து கேளுங்க.. நாளைக்கு கொழுப்பு குறைக்கிறது எப்படினு சொல்லித் தரேன்..
---------------------------------------
விடுகதைகள்!!
---------------------------------------
🤔 மணி அடித்தால் மலைப்பாம்பு நிற்கும், அது என்ன? 

🚂ரயில் 

🤔 பிடியில்லாத குடையை தொட முடியவில்லை, அது என்ன? 

🌌வானம்

🤔 சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும், அது என்ன? 

💌தபால்
---------------------------------------
இது உண்மை தானே?
---------------------------------------
👉 கடவுள் இருக்கிறார் என்பதை விட CCTV Camera இருக்கு என்கிற பயமே.. பெரும்பாலான தவறுகளை தடுக்கிறது..!

👉 எல்லாம் கடந்துப் போகும் என்றிருக்காமல், எல்லாவற்றையும் கடக்க பழகிக் கொண்டாலே போதும், வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாக அமைந்து விடும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்