>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 9 அக்டோபர், 2023

    09-10-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    புரட்டாசி 22 - திங்கட்கிழமை

    🔆 திதி : பிற்பகல் 02.59 வரை தசமி பின்பு ஏகாதசி.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 05.56 வரை பூசம் பின்பு ஆயில்யம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 பூராடம்

    பண்டிகை

    🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    🌷 கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

    🌷 திருநெல்வேலி ஸ்ரீகாந்தியம்மன் தங்க சப்பரத்தில் தபசு காட்சி.

    வழிபாடு

    🙏 ஆண்டாளை வழிபட சுபகாரிய தடைகள் குறையும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

    🌟 யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

    🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு உகந்த நாள்.

    🌟 ஜெபம் செய்வதற்கு உகந்த நாள்.

    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

    மேஷ லக்னம் 06.22 PM முதல் 08.05 PM வரை 

    ரிஷப லக்னம் 08.06 PM முதல் 10.07 PM வரை 

    மிதுன லக்னம் 10.08 PM முதல் 12.19 AM வரை 

    கடக லக்னம் 12.20 AM முதல் 02.28 AM வரை 

    சிம்ம லக்னம் 02.29 AM முதல் 04.31 AM வரை 

    கன்னி லக்னம் 04.32 AM முதல் 06.37 AM வரை 

    துலாம் லக்னம் 06.38 AM முதல் 08.43 AM வரை 

    விருச்சிக லக்னம் 08.44 AM முதல் 10.55 AM வரை 

    தனுசு லக்னம் 10.56 AM முதல் 01.02 PM வரை 

    மகர லக்னம் 01.03 PM முதல் 02.56 PM வரை 

    கும்ப லக்னம் 02.57 PM முதல் 04.38 PM வரை 

    மீன லக்னம் 04.39 PM முதல் 06.17 PM வரை
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
    இன்றைய ராசி பலன்கள்
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
    மேஷம்

    மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையவிருக்கும் மேஷ ராசி அன்பர்களே.. ஆடம்பரமான சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடி வரும். எதிர்பாராத புதிய சூழல் உண்டாகும். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் புதிய மாற்றத்தையும், இளஞ்சாம்பல் நிறம் முயற்சிகளையும் நிறைவேற்றித் தரும்.


    அஸ்வினி : வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். 

    பரணி : உற்பத்தி துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும்.

    கிருத்திகை : கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    பெருமை நிறைந்த நாளாக அமையவிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே.. புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். இன்று உங்களுக்குக் கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 1ம் எண் புதிய பயணத்தையும், ஆரஞ்சு நிறம் புதிய சிந்தனைகளையும் உருவாக்கும்.


    கிருத்திகை : வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

    ரோகிணி : எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். 

    மிருகசீரிஷம் : நினைத்த காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். 
    ---------------------------------------
    மிதுனம்

    மேன்மை நிறைந்த நாளாக அமையவிருக்கும் மிதுன ராசி அன்பர்களே.. எதிர்வாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் மேன்மையையும், ஆகாய நீல நிறம் புதுமையான வாய்ப்புகளையும் தரும்.


    மிருகசீரிஷம் : தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும்.

    திருவாதிரை : மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவீர்கள். 

    புனர்பூசம் : நண்பர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். 
    ---------------------------------------
    கடகம்

    நிறைவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் கடக ராசி அன்பர்களே.. உணர்வுப்பூர்வமாகப் பேசுவதைவிடச் சூழ்நிலையறிந்து செயல்படுவது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் வெற்றியையும், இளஞ்சிவப்பு நிறம் வரவுகளையும் ஏற்படுத்தித் தரும்.


    புனர்பூசம் : மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

    பூசம் : வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

    ஆயில்யம் : மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்துச் செயல்படவும்.
    ---------------------------------------
    சிம்மம்

    ஆதரவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே.. உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். இன்று உங்களுக்கு தென்மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 8ம் எண் மன உறுதியையும், மஞ்சள் நிறம் உதவிகளையும் உருவாக்கித் தரும்.


    மகம் : இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். 

    பூரம் : தாய்வழி உறவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். 

    உத்திரம் : எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். 
    ---------------------------------------
    கன்னி

    லாபம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் கன்னி ராசி அன்பர்களே.. தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். முதலாளி வகையில் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மாற்றமான சூழல் அமையும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் புதிய தேடலையும், பொன் நிறம் ஆதரவுகளையும் அமைத்துத் தரும்.


    உத்திரம் : சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். 

    அஸ்தம் : கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். 

    சித்திரை : கணுக்காலில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும்.
    ---------------------------------------
    துலாம்

    புகழ் நிறைந்த நாளாக அமையவிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.. வியாபார சிந்தனைகள் மேம்படும். யாகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் லாபத்தையும், பச்சை நிறம் சேமிப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


    சித்திரை : அரசுப் பணிகளில் ஆலோசனை பெற்றுச் செயல்படவும். 

    சுவாதி : உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். 

    விசாகம் : ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    முயற்சி நிறைந்த நாளாக அமையவிருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே.. வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட தூரப் பயண சிந்தனைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 7ம் எண் புதிய கண்ணோட்டத்தையும், இளம் மஞ்சள் நிறம் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


    விசாகம் : நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். 

    அனுசம் : ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். 

    கேட்டை : மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். 
    ---------------------------------------
    தனுசு

    பக்தி நிறைந்த நாளாக அமையவிருக்கும் தனுசு ராசி அன்பர்களே.. உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 3ம் எண் வித்தியாசமான கற்பனையையும், ஊதா நிறம் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


    மூலம் : அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் மேம்படும். 

    பூராடம் : நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். 

    உத்திராடம் : வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். 
    ---------------------------------------
    மகரம்

    தடைகளை வெற்றி கொள்ளவிருக்கும் மகர ராசி அன்பர்களே.. அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். இன்று உங்களுக்கு தென்மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 8ம் எண் தன்னம்பிக்கையையும், சந்தன நிறம் புதிய அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


    உத்திராடம் : விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். 

    திருவோணம் : அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். 

    அவிட்டம் : சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். 
    ---------------------------------------
    கும்பம்

    வரவு நிறைந்த நாளாக அமையவிருக்கும் கும்ப ராசி அன்பர்களே.. பணி பொறுப்புகளால் நேரம் தவறி உணவு உண்பீர்கள். வழக்கு விவகாரங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் புரிதலையும், அடர் நீல நிறம் மாற்றமான அனுபவத்தையும் கொடுக்கும்.


    அவிட்டம் : வாகன பயணங்களில் நிதானம் வேண்டும்.

    சதயம் : நிலுவையில் இருந்துவந்த செயல்களைச் செய்து முடிப்பீர்கள். 

    பூரட்டாதி : வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். 
    ---------------------------------------
    மீனம்

    நட்பு நிறைந்த நாளாக அமையவிருக்கும் மீன ராசி அன்பர்களே.. வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். பிள்ளைகளின் வழியில் வருமானங்கள் ஏற்படும். பாரம்பரியம் தொடர்பான தேடல் உண்டாகும். இன்று உங்களுக்கு தென்கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் ஒற்றுமையையும், வெண் சாம்பல் நிறம் நெருக்கத்தையும் அமைத்துத் தரும்.


    பூரட்டாதி : எதையும், பகுத்தறிந்து செயல்படுவீர்கள். 

    உத்திரட்டாதி : மனதில் புதுவிதமான லட்சியங்கள் பிறக்கும். 

    ரேவதி : கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக