புரட்டாசி 27 - சனிக்கிழமை
🔆 திதி : இரவு 11.57 வரை அமாவாசை பின்பு பிரதமை.
🔆 நட்சத்திரம் : மாலை 05.44 வரை அஸ்தம் பின்பு சித்திரை.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.04 வரை அமிர்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 பூரட்டாதி, உத்திரட்டாதி
பண்டிகை
🌷 திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமஞ்சன சேவை.
🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
🙏 முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 மகாளய அமாவாசை
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 விவசாய பணிகளை செய்ய சிறந்த நாள்.
🌟 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
🌟 சாலை அமைப்பதற்கு ஏற்ற நாள்.
🌟 நீர்நிலை தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 06.03 PM முதல் 07.46 PM வரை
ரிஷப லக்னம் 07.47 PM முதல் 09.48 PM வரை
மிதுன லக்னம் 09.49 PM முதல் 11.59 PM வரை
கடக லக்னம் 12.00 AM முதல் 02.09 AM வரை
சிம்ம லக்னம் 02.10 AM முதல் 04.12 AM வரை
கன்னி லக்னம் 04.11 AM முதல் 06.17 AM வரை
துலாம் லக்னம் 06.18 AM முதல் 08.24 AM வரை
விருச்சிக லக்னம் 08.25 AM முதல் 10.36 AM வரை
தனுசு லக்னம் 10.37 AM முதல் 12.43 PM வரை
மகர லக்னம் 12.44 PM முதல் 02.36 PM வரை
கும்ப லக்னம் 02.37 PM முதல் 04.18 PM வரை
மீன லக்னம் 04.19 PM முதல் 05.58 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
குடும்ப நபர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணி சார்ந்த முயற்சிகள் மேம்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : லாபம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தைரியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். வருமான நிலையில் திருப்தி உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். பழுதடைந்த வாகனங்களைச் சீர் செய்வீர்கள். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : மந்தமான நாள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். தாமதம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : திருப்திகரமான நாள்.
ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
பொருளாதார நெருக்கடிகள் குறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் திருப்பமான சூழல் அமையும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வேகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : தெளிவு உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
துலாம்
வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு விஷயங்களுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். குழந்தைகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்
வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். உறவுகளுடன் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். செயல்பாடுகளில் சுதந்திரப்போக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சிக்கல் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : அனுகூலம் உண்டாகும்.
பூராடம் : முயற்சிகள் சாதகமாகும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மகரம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபாரப் பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : போட்டிகள் குறையும்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் மீதான கருத்துகளைக் குறைத்துக் கொள்ளவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
மீனம்
குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சுதந்திரம் மேம்படும். நினைத்த பணிகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உறுதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சுதந்திரம் மேம்படும்.
ரேவதி : ஆதரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக