Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 நவம்பர், 2023

30-11-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


கார்த்திகை 14 - வியாழக்கிழமை

🔆 திதி : மாலை 03.31 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

🔆 நட்சத்திரம் : மாலை 04.36 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.15 வரை சித்தயோகம் பின்பு மாலை 04.36 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 அனுஷம், கேட்டை

பண்டிகை

🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சன சேவை.

வழிபாடு

🙏 விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 சங்கடஹர சதுர்த்தி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 உழவுமாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.

🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கும் ஏற்ற நாள்.

🌟 களை செடிகளை அகற்றுவதற்கு நல்ல நாள்.

🌟 கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 02.58 PM முதல் 04.41 PM வரை

ரிஷப லக்னம் 04.42 PM முதல் 06.43 PM வரை

மிதுன லக்னம் 06.44 PM முதல் 08.55 PM வரை

கடக லக்னம் 08.56 PM முதல் 11.04 PM வரை

சிம்ம லக்னம் 11.05 PM முதல் 01.07 AM வரை

கன்னி லக்னம் 01.08 AM முதல் 03.08 AM வரை

துலாம் லக்னம் 03.09 AM முதல் 05.15 AM வரை

விருச்சிக லக்னம் 05.16 AM முதல் 07.31 AM வரை

தனுசு லக்னம் 07.32 AM முதல் 09.38 AM வரை

மகர லக்னம் 09.39 AM முதல் 11.31 AM வரை

கும்ப லக்னம் 11.32 AM முதல் 01.13 PM வரை

மீன லக்னம் 01.14 PM முதல் 02.53 PM வரை
___________________________________________
இன்றைய ராசி பலன்கள்
___________________________________________
மேஷம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். சூழ்நிலையறிந்து கருத்துகளைப் பரிமாறுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கல்விப் பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அஸ்வினி : தைரியம் அதிகரிக்கும். 

பரணி : பயணங்கள் கைகூடும்.

கிருத்திகை : புதுமையான நாள்.
---------------------------------------
ரிஷபம்

புதுமையான உணவுகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 
---------------------------------------
மிதுனம்

திட்டமிட்ட செயல்களில் மாற்றமான சூழல் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்த்துக் கொள்ளவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் ஏற்படும். எதிர்ப்பு குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

திருவாதிரை : வாதங்களைத் தவிர்க்கவும்.

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்

ஆன்மிகம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்தும் போது பொறுமை அவசியம். மறைவான செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதில் விருப்பம் உண்டாகும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 


புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும். 

பூசம் : பொறுமை வேண்டும்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
சிம்மம்

புதிய பதவிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கலைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


மகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

பூரம் : ஆதாயம் மேம்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி

புதிய நபர்களின் ஆதரவால் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் மூலம் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு மேம்படும். மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


உத்திரம் : நட்பு விரிவடையும்.   

அஸ்தம் : முடிவு கிடைக்கும்.

சித்திரை : செல்வாக்கு அதிகரிக்கும். 
---------------------------------------
துலாம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பயணம் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய தேடலை ஏற்படுத்தும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


சித்திரை : சேமிப்பு குறையும்.

சுவாதி : முடிவு ஏற்படும்.

விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்

எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சுய கணிப்புகள் சற்று காலதாமதமாக நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

கேட்டை : தாமதமாக நிறைவேறும். 
---------------------------------------
தனுசு

தாய்வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 


மூலம் : ஆதாயம் உண்டாகும்.  

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

உத்திராடம் : தெளிவு பிறக்கும். 
---------------------------------------
மகரம்

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளைப் புரிந்து செயல்படுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஊக்கம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 

திருவோணம் : புரிதல் ஏற்படும்.

அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
கும்பம்

கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபகாரியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : அன்யோன்யம் அதிகரிக்கும். 

பூரட்டாதி : வரவுகள் மேம்படும்.
---------------------------------------
மீனம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். எதிலும் தனித்துச் செயல்படுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி : சோர்வு நீங்கும். 

ரேவதி : லாபம் மேம்படும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக