மார்கழி 7 - சனிக்கிழமை
🔆 திதி : காலை 06.27 வரை ஏகாதசி பின்பு துவாதசி.
🔆 நட்சத்திரம் : இரவு 10.34 வரை பரணி பின்பு கிருத்திகை.
🔆 அமிர்தாதி யோகம் : இரவு 10.34 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 உத்திரம், அஸ்தம்
பண்டிகை
🌷 திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் வாகனத்தில் புறப்பாடு.
🌷 வீரவநல்லூர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வரும் காட்சி.
🌷 மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.
வழிபாடு
🙏 பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 வைகுண்ட ஏகாதசி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 தானியம் சேமிப்பதற்கு நல்ல நாள்.
🌟 புதிய அடுப்பு அமைக்க ஏற்ற நாள்.
🌟 கால்நடைகள் வாங்க சிறந்த நாள்.
🌟 நெல் விதைப்பதற்கு உகந்த நாள்.
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 01.27 PM முதல் 03.10 PM வரை
ரிஷப லக்னம் 03.11 PM முதல் 05.13 PM வரை
மிதுன லக்னம் 05.14 PM முதல் 07.24 PM வரை
கடக லக்னம் 07.25 PM முதல் 09.33 PM வரை
சிம்ம லக்னம் 09.34 PM முதல் 11.36 PM வரை
கன்னி லக்னம் 11.37 PM முதல் 01.38 AM வரை
துலாம் லக்னம் 01.39 AM முதல் 03.45 AM வரை
விருச்சிக லக்னம் 03.46 AM முதல் 05.56 AM வரை
தனுசு லக்னம் 05.57 AM முதல் 08.07 AM வரை
மகர லக்னம் 08.08 AM முதல் 10.01 AM வரை
கும்ப லக்னம் 10.02 AM முதல் 11.43 AM வரை
மீன லக்னம் 11.44 AM முதல் 01.22 PM வரை
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
இன்றைய ராசி பலன்கள்
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
மேஷம்
இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். பார்வை தொடர்பான சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் வளைந்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : கவலைகள் மறையும்.
பரணி : சிக்கல்கள் குறையும்.
கிருத்திகை : கனிவு வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சில விரயம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகமான சில போட்டிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : விரயம் ஏற்படும்.
ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
தனவரவுகள் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விஷயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : தெளிவு உண்டாகும்.
புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கடகம்
நெருக்கமானவர்கள் பற்றிய சுயரூபம் வெளிப்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். நண்பர்களின் ஆலோசனை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிஜமாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : கனவுகள் நிஜமாகும்.
---------------------------------------
சிம்மம்
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : சோர்வு விலகும்.
பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. துறை சார்ந்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : வேறுபாடுகள் மறையும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
துலாம்
முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சுபச்செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : மதிப்பு கிடைக்கும்.
கேட்டை : குழப்பங்கள் மறையும்.
---------------------------------------
தனுசு
குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிற மத மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆதாயம் ஏற்படும்.
பூராடம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த ஆர்வமின்மை குறையும். வேலை மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். மறைமுகமான சில எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
திருவோணம் : ஆர்வமின்மை குறையும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்
குடும்பத்தோடு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாயப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
நண்பர்களுக்கிடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : மதிப்பு கிடைக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக