Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 டிசம்பர், 2023

அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் திருமலங்குடி தஞ்சாவூர்

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

தெற்கே உள்ள ஒரே ஸ்தலம்.

சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவகிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது.

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக