தேவையானப் பொருட்கள் :
குதிரைவாலி அரிசி - 1 கப்
வரகு அரிசி - 1 கப்
சாமை அரிசி - 1 கப்
தினை அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - சிறிதளவு
பிரண்டை துண்டுகள் - 15
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம் மற்றும் உளுந்தை ஒன்றாகவும் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் நன்றாக ஊறியதும் மென்மையாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
பின்னர் பிரண்டையைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விட வேண்டும். நன்றாக ஆறியவுடன் நைசாக அரைத்து அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சு டானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி, நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை தயார்!!!
சமையல் குறிப்புகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக