🔆 திதி : காலை 07.48 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.
🔆 நட்சத்திரம் : இரவு 08.59 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.35 வரை சித்தயோகம் பின்பு இரவு 08.59 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 திருவோணம், அவிட்டம்
பண்டிகை
🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு
🙏 மாரியம்மனை வழிபட மனஅமைதி உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 உழவு செய்வதற்கு நல்ல நாள்.
🌟 சிலைகளை வடிவமைப்பதற்கு ஏற்ற நாள்.
🌟 செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.
🌟 நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 10.58 AM முதல் 12.41 PM வரை
ரிஷப லக்னம் 12.42 PM முதல் 02.43 PM வரை
மிதுன லக்னம் 02.44 PM முதல் 04.55 PM வரை
கடக லக்னம் 04.56 PM முதல் 07.04 PM வரை
சிம்ம லக்னம் 07.05 PM முதல் 09.07 PM வரை
கன்னி லக்னம் 09.08 PM முதல் 11.08 PM வரை
துலாம் லக்னம் 11.09 PM முதல் 01.15 AM வரை
விருச்சிக லக்னம் 01.16 AM முதல் 03.27 AM வரை
தனுசு லக்னம் 03.28 AM முதல் 05.34 AM வரை
மகர லக்னம் 05.35 AM முதல் 07.31 AM வரை
கும்ப லக்னம் 07.32 AM முதல் 09.13 AM வரை
மீன லக்னம் 09.14 AM முதல் 10.53 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தடையாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : கருத்து வேறுபாடு நீங்கும்.
பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி நடந்து கொள்ளவும். தந்தைவழி வியாபாரப் பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : லாபம் மேம்படும்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
மிதுனம்
கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
திருவாதிரை : புரிதல் அதிகரிக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------
கடகம்
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கத்தரி பூ நிறம்
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : திறமை வெளிப்படும்.
---------------------------------------
சிம்மம்
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலை உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனை உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : திறன் மேம்படும்.
உத்திரம் : அதிர்ஷ்டகரமான நாள்.
---------------------------------------
கன்னி
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : ஆலோசனை கிடைக்கும்.
அஸ்தம் : புதுமையான நாள்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.
சுவாதி : சிந்தனை பிறக்கும்.
விசாகம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
விசாகம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : வாய்ப்பு கிடைக்கும்.
கேட்டை : ஆசைகள் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : சுபமான நாள்.
உத்திராடம் : தடைகள் விலகும்.
---------------------------------------
மகரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கும்பம்
நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். திடீர் செலவுகள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : செலவுகள் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
பூரட்டாதி : உதவி கிடைக்கும்.
உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.
ரேவதி : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக