Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 பிப்ரவரி, 2024

29-02-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

மாசி 17 - வியாழக்கிழமை 

🔆 திதி : அதிகாலை 02.32 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

🔆 நட்சத்திரம் : காலை 08.26 வரை சித்திரை பின்பு சுவாதி.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 08.26 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 உத்திரட்டாதி
பண்டிகை

🌷 காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.

🌷 ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் வாகனத்தில் புறப்பாடு.

🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

🌷 ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் பால் அபிஷேக ஆராதனை.

🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

வழிபாடு

🙏 குருமார்களை வழிபட மாற்றம் பிறக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு

🌟 தானியம் வாங்க உகந்த நாள்.

🌟 மாங்கல்யம் செய்ய சிறந்த நாள்.

🌟 திருமணம் செய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 பெயர் சூட்ட நல்ல நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 09.00 AM முதல் 10.43 AM வரை 

ரிஷப லக்னம் 10.44 AM முதல் 12.45 PM வரை 

மிதுன லக்னம் 12.46 PM முதல் 02.57 PM வரை

கடக லக்னம் 02.58 PM முதல் 05.06 PM வரை

சிம்ம லக்னம் 05.07 PM முதல் 07.09 PM வரை

கன்னி லக்னம் 07.10 PM முதல் 09.11 PM வரை

துலாம் லக்னம் 09.12 PM முதல் 11.17 PM வரை

விருச்சிக லக்னம் 11.18 PM முதல் 01.29 AM வரை

தனுசு லக்னம் 01.30 AM முதல் 03.36 AM வரை

மகர லக்னம் 03.37 AM முதல் 05.30 AM வரை

கும்ப லக்னம் 05.31 AM முதல் 07.15 AM வரை

மீன லக்னம் 07.16 AM முதல் 08.55 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
        இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : பலவீனங்களை அறிவீர்கள்.
பரணி : தனவரவுகள் மேம்படும்.
கிருத்திகை : தெளிவு பிறக்கும். 
---------------------------------------
ரிஷபம்

குடும்பத்தினரிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரோகிணி : வாய்ப்புகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்

முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும். 
திருவாதிரை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
புனர்பூசம் : கனவுகள் பிறக்கும். 
---------------------------------------
கடகம்

உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : அத்தியாயம் பிறக்கும். 
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகன முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : ஒத்துழைப்பான நாள்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும். 
---------------------------------------
கன்னி

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணியில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : லாபம் உண்டாகும்.
சித்திரை : துரிதம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்

 சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தோல்வி மறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அசதி மறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : ஆலோசனை கிடைக்கும்.
கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
தனுசு

மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மற்றவர்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்பு கைகூடிவரும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : உற்சாகம் பிறக்கும்.  
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
மகரம்

சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : சந்திப்பு ஏற்படும். 
திருவோணம் : தாமதங்கள் விலகும். 
அவிட்டம் : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகான்களின் சந்திப்பு சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 
சதயம் : போட்டிகள் மறையும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மீனம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

பூரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும். 
ரேவதி : சஞ்சலங்கள் ஏற்படும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக