Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மார்ச், 2024

27-03-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

பங்குனி 14 - புதன்கிழமை 

🔆 திதி : மாலை 04.38 வரை துவிதியை பின்பு திரிதியை.

🔆 நட்சத்திரம் : மாலை 03.47 வரை சித்திரை பின்பு சுவாதி.

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 சதயம், பூரட்டாதி

பண்டிகை

🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்.

🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பட்டாபிஷேகம்.

🌷 திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் உறசவம் ஆரம்பம்.

வழிபாடு

🙏 மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 களை செடிகளை அகற்ற உகந்த நாள்.

🌟 வேண்டுதலை நிறைவேற்ற ஏற்ற நாள்.

🌟 சங்கீதம் கற்க நல்ல நாள்.

🌟 புத்தகம் வெளியிட சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 07.14 AM முதல் 08.57 AM வரை

ரிஷப லக்னம் 08.58 AM முதல் 10.59 AM வரை

மிதுன லக்னம் 11.00 AM முதல் 01.11 PM வரை

கடக லக்னம் 01.12 PM முதல் 03.20 PM வரை

சிம்ம லக்னம் 03.21 PM முதல் 05.23 PM வரை

கன்னி லக்னம் 05.24 PM முதல் 07.24 PM வரை

துலாம் லக்னம் 07.25 PM முதல் 09.31 PM வரை

விருச்சிக லக்னம் 09.32 PM முதல் 11.43 PM வரை

தனுசு லக்னம் 11.44 PM முதல் 01.50 AM வரை

மகர லக்னம் 01.51 AM முதல் 03.43 AM வரை

கும்ப லக்னம் 03.44 AM முதல் 05.25 AM வரை

மீன லக்னம் 05.26 AM முதல் 07.09 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
  இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு  
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும். 
ரோகிணி : மகிழ்ச்சி ஏற்படும்.
மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள்.
---------------------------------------
மிதுனம்

வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு செயல்படவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கவலை விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
புனர்பூசம் : மாற்றமான நாள்.
---------------------------------------
கடகம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : போட்டிகளை சமாளிப்பீர்கள். 
ஆயில்யம் : சலுகைகள் கிடைக்கும். 
---------------------------------------
சிம்மம்

குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : தடைகள் நீங்கும். 
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உதவி செய்யும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : தனவரவுகள் கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான நாள். 
---------------------------------------
துலாம்

மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். பயணங்களின் போது விவேகம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

சித்திரை : சஞ்சலங்கள் மறையும்.  
சுவாதி : கவனம் வேண்டும். 
விசாகம் : உழைப்பு அதிகரிக்கும். 
---------------------------------------
விருச்சிகம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அலைச்சல் உண்டாகும். 
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : சோர்வுகள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு

உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மாற்றம் பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள்.
---------------------------------------
மகரம்

எதிலும் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு  
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும். 
---------------------------------------
கும்பம்

முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தாமதங்கள் விலகும். 
சதயம் : மதிப்பு ஏற்படும்.
பூரட்டாதி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
---------------------------------------
மீனம்

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சில பணிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு  
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பதற்றமின்றி செயல்படவும்.
உத்திரட்டாதி : சோர்வுகள் உண்டாகும். 
ரேவதி : மதிப்பளித்துச் செயல்படவும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக