கொண்டைக்கடலை - 3/4 கப்
வெள்ளரிக்காய் - 1
கேரட் - பாதியளவு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 (சிறியது)
வறுத்து பொடித்த சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. கொண்டைக்கடலையை இரண்டு முறை கழுவி போதுமான நீரில் 8 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின் மீண்டும் ஒருமுறை கழுவி பிரஷர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கிய பின் ஒரு வடிகட்டியில் தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.
3. வெள்ளரிக்காய், கேரட்டை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒர் அகலமான பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வறுத்து பொடித்த சீரகப்பொடி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. வாணலியில் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் வட்டமாக பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை லேசாக வதக்கி கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சாலட் செய்யும் போது உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்க வேண்டும். உப்பு அதிகமாகி விட்டால் சாப்பிடும் போது கஷ்டமாக இருக்கும். பச்சை மிளகாயை தேங்காய் எண்ணெயில் வதக்கி சேர்க்கும் போது அதன் காரம் குறைந்து சாப்பிடும் போது நன்றாக இருக்கும். பரிமாறும் போது எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிது பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக