Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

07-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

பங்குனி 25 - ஞாயிற்றுக்கிழமை 


🔆 திதி : அதிகாலை 03.47 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.


🔆 நட்சத்திரம் : காலை 11:43 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.


🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.07 வரை மரணயோகம் பின்பு காலை 11.43 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.


சந்திராஷ்டம நட்சத்திரம் 


💥 பூசம், ஆயில்யம்


பண்டிகை


🌷 சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உற்சவ ஆரம்பம் மற்றும் கேடய சப்பரத்தில் பவனி வரும் காட்சி.


🌷 ஒழுகைமங்கலம் ஸ்ரீமாரியம்மன் ரத உற்சவம்.


🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி வைரமுடி சேவை.


வழிபாடு


🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.


விரதாதி விசேஷங்கள் :


💥 சிவராத்திரி


எதற்கெல்லாம் சிறப்பு?


🌟 உழவு செய்வதற்கு ஏற்ற நாள்.


🌟 புதிய ஆடைகளை அணிய சிறந்த நாள்.


🌟 தர்மம் செய்வதற்கு நல்ல நாள்.


🌟 விதை விதைக்க உகந்த நாள்.

:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::

லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::

மேஷ லக்னம் 06.31 AM முதல் 08.14 AM வரை


ரிஷப லக்னம் 08.15 AM முதல் 10.16 AM வரை 


மிதுன லக்னம் 10.17 AM முதல் 12.27 PM வரை 


கடக லக்னம் 12.28 PM முதல் 02.37 PM வரை 


சிம்ம லக்னம் 02.38 PM முதல் 04.40 PM வரை 


கன்னி லக்னம் 04.41 PM முதல் 06.41 PM வரை 


துலாம் லக்னம் 06.42 PM முதல் 08.48 PM வரை 


விருச்சிக லக்னம் 08.49 PM முதல் 11.00 PM வரை 


தனுசு லக்னம் 11.01 PM முதல் 01.07 AM வரை 


மகர லக்னம் 01.08 AM முதல் 03.00 AM வரை 


கும்ப லக்னம் 03.01 AM முதல் 04.42 AM வரை 



மீன லக்னம் 04.43 AM முதல் 06.26 AM வரை

:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::

இன்றைய ராசி பலன்கள்

:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::

மேஷம்


நினைத்த சில பணிகள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். மனம் விட்டு பேசுவதன் மூலம் கவலைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் சில மாற்றமான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். வெற்றி பிறக்கும் நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்


அஸ்வினி : கவலைகள் குறையும்.

பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------

ரிஷபம்


மனதில் முன்னேற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். வாகனம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : ஆதாயம் உண்டாகும். 

ரோகிணி : திறமைகள் வெளிப்படும். 

மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

மிதுனம்


எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பழைய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்


மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.

திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.

புனர்பூசம் : மதிப்பு கிடைக்கும்.

---------------------------------------

கடகம்


உடலில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். குடும்பத்தில் புரிதல் ஏற்படும். சில இடங்களில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் துரிதம் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுகம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 


புனர்பூசம் : சோர்வுகள் குறையும். 

பூசம் : மாற்றமான நாள்.

ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------

சிம்மம்


பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். வாடிக்கையாளர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்கள் இடத்தில் சாதகமின்மையான சூழல் அமையும். எதிலும் விவேகத்தோடு செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்


மகம் : தடுமாற்றம் ஏற்படும்.

பூரம் : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.

---------------------------------------

கன்னி


பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புகழ் மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


உத்திரம் : ஒத்துழைப்பு ஏற்படும். 

அஸ்தம் : மாற்றமான நாள்.

சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும். 

---------------------------------------

துலாம்


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வியூகங்களை மாற்றி அமைப்பீர்கள். உத்தியோகத்தில் புதுமையான சூழல் அமையும். லாபம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


சித்திரை : தனவரவுகள் உண்டாகும்.

சுவாதி : சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------

விருச்சிகம்


எதிர்காலம் சார்ந்து புதிய வியூகங்களை அமைப்பீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை அவசியம். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


விசாகம் : வியூகங்களை அமைப்பீர்கள்.

அனுஷம் : ஆதாயம் ஏற்படும். 

கேட்டை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------

தனுசு


சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழியில் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் தொடர்பான சுபகாரிய எண்ணங்கள் சாதகமாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : தெளிவு பிறக்கும்.

பூராடம் : திருப்திகரமான நாள்.

உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.

---------------------------------------

மகரம்


பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில அலைச்சல்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். நலம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.

திருவோணம் : அனுபவம் கிடைக்கும். 

அவிட்டம் : தைரியம் பிறக்கும். 

---------------------------------------

கும்பம்


கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளால் கவலைகள் குறையும். வியாபாரத்தில் தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். ஆசை மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம் 


அவிட்டம் : புரிதல் ஏற்படும். 

சதயம் : கவலைகள் குறையும்.

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். 

---------------------------------------

மீனம்


எந்தவொரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் இறுக்கங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் அணுகுவது நல்லது. கீர்த்தி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


பூரட்டாதி : விவேகத்தோடு செயல்படவும். 

உத்திரட்டாதி : ஆலோசனை வேண்டும்.

ரேவதி : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக