வைகாசி 16 - புதன்கிழமை
🔆 திதி : பிற்பகல் 01.26 வரை சஷ்டி பின்பு சப்தமி.
🔆 நட்சத்திரம் : காலை 08.36 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 08.36 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மிருகசீரிஷம்
பண்டிகை
🌷 காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜர் ஆளும் பல்லக்கில் தீர்த்தவாரி.
🌷 சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் ரத உற்சவம்.
🌷 ஸ்ரீபழனி ஆண்டவர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
🙏 முருகரை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥தேய்பிறை சஷ்டி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
🌟 வண்டி பழுதுகளை சரிசெய்ய உகந்த நாள்.
🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை செய்ய நல்ல நாள்.
🌟 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
_______________________________
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
_______________________________
மேஷ லக்னம் 03.14 AM முதல் 04.58 AM வரை
ரிஷப லக்னம் 04.59 AM முதல் 07.05 AM வரை
மிதுன லக்னம் 07.06 AM முதல் 09.16 AM வரை
கடக லக்னம் 09.17 AM முதல் 11.24 AM வரை
சிம்ம லக்னம் 11.25 AM முதல் 01.26 PM வரை
கன்னி லக்னம் 01.27 PM முதல் 03.26 PM வரை
துலாம் லக்னம் 03.27 PM முதல் 05.32 PM வரை
விருச்சிக லக்னம் 05.33 PM முதல் 07.43 PM வரை
தனுசு லக்னம் 07.44 PM முதல் 09.51 PM வரை
மகர லக்னம் 09.52 PM முதல் 11.45 PM வரை
கும்ப லக்னம் 11.46 PM முதல் 01.28 AM வரை
மீன லக்னம் 01.29 AM முதல் 03.09 AM வரை
_______________________________
இன்றைய ராசி பலன்கள்
_______________________________
மேஷம்
சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட சில வேலைகள் நிறைவுபெறும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : தன்னம்பிக்கை உண்டாகும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். புனித தல பயணங்கள் செல்லும் வாய்ப்பு கைகூடும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். முன்ஜாமின் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கடகம்
மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : சிக்கல்கள் குறையும்.
ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் கல்வி குறித்த புதிய தேடல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்திற்கு தேவையான உதவி சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகப் பணிகளில் சில புதுமைகள் மூலம் மற்றவர்களின் கவனத்தை கவர்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : தேடல் பிறக்கும்.
பூரம் : உதவிகள் சாதகமாகும்.
உத்திரம் : புதுமையான நாள்.
---------------------------------------
கன்னி
குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : குழப்பங்கள் விலகும்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். புரிதல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
சித்திரை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். மனதில் உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : எதிர்ப்புகள் விலகும்.
அனுஷம் : லாபங்கள் மேம்படும்.
கேட்டை : நெருக்கடிகள் நீங்கும்.
---------------------------------------
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். தனவரவுகள் திருப்தியாக அமையும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மகரம்
பாகப் பிரிவினைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பு சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். குழந்தைகளின் வழியில் புரிதல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
மனதில் புதுவிதமான சிந்தனை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தடைபட்ட சில பயணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : சிந்தனை உண்டாகும்.
உத்திரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.
ரேவதி : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக