>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 11 ஜூன், 2024

    11-06-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    வைகாசி 29 - செவ்வாய்க்கிழமை

    🔆 திதி : இரவு 07.26 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

    🔆 நட்சத்திரம் : முழுவதும் ஆயில்யம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம் 

    💥 இன்று முழுவதும் பூராடம்

    பண்டிகை

    🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

    🌷 சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

    🌷 குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி.

    வழிபாடு

    🙏 கந்தனை வழிபட தடைகள் விலகும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

    🌟 யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

    🌟 கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு உகந்த நாள்.

    🌟 ஜெபம் செய்வதற்கு சிறந்த நாள்.
    _______________________________
    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
    _______________________________
    மேஷ லக்னம் 02.23 AM முதல் 04.07 AM வரை

    ரிஷப லக்னம் 04.08 AM முதல் 06.14 AM வரை 

    மிதுன லக்னம் 06.15 AM முதல் 08.25 AM வரை 

    கடக லக்னம் 08.26 AM முதல் 10.33 AM வரை 

    சிம்ம லக்னம் 10.34 AM முதல் 12.35 PM வரை 

    கன்னி லக்னம் 12.36 PM முதல் 02.35 PM வரை 

    துலாம் லக்னம் 02.36 PM முதல் 04.41 PM வரை 

    விருச்சிக லக்னம் 04.42 PM முதல் 06.52 PM வரை 

    தனுசு லக்னம் 06.53 PM முதல் 09.00 PM வரை 

    மகர லக்னம் 09.01 PM முதல் 10.54 PM வரை 

    கும்ப லக்னம் 10.55 PM முதல் 12.37 AM வரை 

    மீன லக்னம் 12.38 AM முதல் 02.18 AM வரை
    _______________________________
     இன்றைய ‌ராசி பலன்கள்
    _______________________________
    மேஷம்

    உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வாகன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

    அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும். 
    பரணி : வசதிகள் மேம்படும்.
    கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
    ---------------------------------------
    ரிஷபம்

    எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சகோதரர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சக வியாபாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அன்பு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

    கிருத்திகை : வரவுகள் உண்டாகும். 
    ரோகிணி : கவலைகள் மறையும்.
    மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
    ---------------------------------------
    மிதுனம்

    பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.  

    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 9
    அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

    மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
    திருவாதிரை : நெருக்கடிகள் மறையும்.
    புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 
    ---------------------------------------
    கடகம்

    சந்தேக உணர்வுகளால் குழப்பம் ஏற்படும். வியாபார ரகசியங்களில் பொறுமை காக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் போது மிதவேகம் நன்மையை தரும். உடனிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. லாபம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : பச்சை

    புனர்பூசம் : பொறுமை காக்கவும்.
    பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
    ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
    ---------------------------------------
    சிம்மம்

    சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். அலைபாயும் சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பிறமொழி மக்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நலம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 7
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

    மகம் : பயணங்கள் அதிகரிக்கும்.
    பூரம் : குழப்பமான நாள்.
    உத்திரம் : பொறுமை வேண்டும்.
    ---------------------------------------
    கன்னி

    உழைப்பிற்கு உண்டான ஊதியம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் விரைவில் நடக்கும். வியாபார பணிகளில் செழிப்பான சூழல் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். ஜெயம் நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

    உத்திரம் : ஆதாயம் கிடைக்கும். 
    அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும். 
    சித்திரை : மந்தத்தன்மை விலகும். 
    ---------------------------------------
    துலாம்

    சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். விளையாட்டு சார்ந்த செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மறதி விலகும் நாள்.  


    அதிர்ஷ்ட திசை : மேற்கு 
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

    சித்திரை : புதுமையான நாள்.
    சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
    விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அலுவலகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பகை மறையும் நாள். 

    அதிர்ஷ்ட திசை : வடக்கு 
    அதிர்ஷ்ட எண் : 4
    அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்

    விசாகம் : விட்டுக் கொடுத்துச் செயல்படவும்.
    அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
    கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும். 
    ---------------------------------------
    தனுசு

    மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கனிவான அணுகுமுறைகள் வியாபாரத்தில் மாற்றத்தை உண்டாக்கும். தந்தை வழியில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சாந்தம் வேண்டிய நாள்.

    அதிர்ஷ்ட திசை : மேற்கு  
    அதிர்ஷ்ட எண் : 8
    அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

    மூலம் : குழப்பங்கள் நீங்கும். 
    பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
    உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
    ---------------------------------------
    மகரம்

    மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றங்கள் மறையும். ஆசை மேம்படும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 5
    அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்

    உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும். 
    திருவோணம் : உதவிகள் சாதகமாகும். 
    அவிட்டம் : தடுமாற்றங்கள் மறையும்.
    ---------------------------------------
    கும்பம்

    சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தனவரவுகள் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த செயல்களில் சில தெளிவுகள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் முன்னுரிமை ஏற்படும். உடலிலும், மனதிலும் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.

    அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
    அதிர்ஷ்ட எண் : 3
    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

    அவிட்டம் : வரவுகள் அதிகரிக்கும். 
    சதயம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
    பூரட்டாதி : சோர்வுகள் விலகும்.
    ---------------------------------------
    மீனம்

    புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சிக்கனமான செயல்பாடுகள் நெருக்கடிகளை தவிர்க்கும். இறை சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் அமையும். அனுபவம் கிடைக்கும் நாள்.

    அதிர்ஷ்ட திசை : தெற்கு 
    அதிர்ஷ்ட எண் : 6
    அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

    பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
    உத்திரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
    ரேவதி : மாற்றமான நாள்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக