பாரசீக வளைகுடாவில் ஒரு கிணறு தோண்டினாலே அரசியல் நடுங்கும், போர் மூளும், அரசுகள் விழும். அந்த காலம் இன்னும் முடியல — ஆனா அடுத்த அத்தியாயம் ஆரம்பிச்சாச்சு.
இப்போ யுத்தம் நடக்குறது எண்ணெய் கிணத்துக்காக இல்ல —
ஒரு சிப்புக்காக. வெறும் உங்கள் நகத்தை விட சிறிய ஒரு சிலிக்கான் துண்டுக்காக.
COVID காட்டிக் கொடுத்தது
2020-21 — உலகே வீட்டுக்குள்ள அடைஞ்சு கூடினோம்.
Laptop வேணும், webcam வேணும், gaming console வேணும், router வேணும். எல்லாத்துக்கும் ஒரே answer — chip.
திடீருன்னு உலகம் ஒரு உண்மையை உணர்ந்தது:
இந்த சின்ன சிப்பு இல்லாம நம்ம ஒரு நாளும் இயங்காது.
காரு நிக்கும், ஆஸ்பத்திரி கஷ்டப்படும், போன் கிடைக்காது, விமானம் கூட தயாரிக்க முடியாது.
ஒரு shortage — மொத்த உலக supply chain-ஐயும் விறைக்க வச்சது.
Morris Chang — இமயமலை மறைஞ்சிருந்த சிங்கம்
அப்போதான் உலக நாடுகளுக்கு ஒரு பேரு தெரிய ஆரம்பிச்சது.
TSMC. Taiwan Semiconductor Manufacturing Company.
இதோட chairman Morris Chang — யாரு இவரு?
வல்லரசுகளே கையேந்தி நிக்கிற ஒரு ஆளு. அமெரிக்க அதிபர் White House-ல அவரை வரவேத்துக்கிறார். ஜப்பான் பிரதமர் தனிய வந்து சந்திக்கிறார். Biden நேரில போய் கை குலுக்குறார்.
ஏன் இந்த மரியாதை?
ஏன்னா உலகோட மிகவும் advanced chips — 90% TSMC-ல தான் உருவாகுது.
---
கொத்தனார் இல்லாம கட்டிடம் இல்ல
புரிஞ்சுக்க ஒரு simple analogy:
வீடு கட்டணும்னா என்ன வேணும்?
- Architect — design போடுவான்
- கொத்தனார் — கட்டுவான்
Chip உலகமும் அதே தான்.
Design— Apple, Nvidia, Qualcomm, AMD (எல்லாரும் அமெரிக்கா)
Fabrication — TSMC (தைவான்)
Apple iPhone-ல இருக்கிற chip, Apple design பண்ணது — ஆனா TSMC கட்டியது.
Nvidia-வோட AI chip, Nvidia design பண்ணது — TSMC கட்டியது.
இப்போ problem என்னன்னா — இந்த கொத்தனார் வேலை design-ஐ விட பல மடங்கு கஷ்டமானது.ஒரு advanced chip-ல 15 billionக்கும் மேல transistors இருக்கும் — அதை ஒரு மனித முடியை விட 1000 மடங்கு மெல்லிய அளவுல பொறிக்கணும்.
இந்த அனுபவம் TSMC-கிட்ட மட்டும் இருக்கு — 40 வருஷம் சேத்து வச்ச அனுபவம்.
புதுசா ஒரு Fab எழுப்பணும்னா? — 20 முதல் 25 billion dollars. அதுவும் எழுப்பினா உடனே வேலை செய்யாது — பல வருஷம் calibration தேவை.
---
சீனாவுக்கு பதட்டம் ஆரம்பிச்சது
வல்லரசுகள் எல்லாம் தைவான் நோக்கி கூட்டம் போட ஆரம்பிச்சதும், சீனாவுக்கு ஒரு விஷயம் புரிஞ்சது —
"TSMC என் கட்டுப்பாட்டுல இருந்தா, நான் உலகையே கட்டுப்படுத்துவேன்."
சீனாவுக்கும் chip fabrication வேணும். ஆனா அவங்களோட தொழில்நுட்பம்? TSMC கட்டுற மிக advanced chipஐ விட 10 வருஷம் பின்னாடி நிக்குது. அவங்க கொத்தனார் வச்சி சிமென்ட் கூட சரியா பூச முடியாது — TSMC போல அணுவளவு துல்லியம் இல்ல.
அதனால தான் — "தைவான் என்னோட பகுதி"ன்னு சீனா சண்டைக்கு வருது.
TSMC-ஐ கைப்பற்றினா, உலக chip supply-யே கையில வரும். அது தான் ஆசை.
திடீர் திருப்பம் — AI வந்தது
இந்த நேரத்துல ஒரு unexpected player enter ஆனது.
OpenAI. ChatGPT. LLMs.
இதுவரை Nvidia-வோட GPU — gaming-க்காக இருந்தது. Call of Duty விளையாட, Ultra HD graphics render பண்ண.
ஆனா AI model train பண்றதுக்கு மிகவும் அதிகமான parallel computation தேவை. யாரோ try பண்ணிப் பாத்தாங்க — Nvidia GPU-தான் அதுக்கு perfect.
திடீருன்னு Nvidia, gaming company இல்லாம AI-யோட உயிர்நாடி ஆச்சு.
100 டாலர்ல இருந்த Nvidia stock — 8000 டாலருக்கு போச்சு. (split-க்கு முன்னாடி)
Jensen Huang ஒரே இரவுல உலகின் மிக முக்கியமான CEO ஆனார்.
ஆனா Nvidia-வும் TSMC இல்லாம ஒரு chip கூட போட முடியாது.
TSMC — AI race-ன் இதயமாக மாறிவிட்டது.
இப்போ நிலைமை என்ன?
ஒரு சின்ன தீவு நாடு — தைவான். மக்கள்தொகை வெறும் 2.3 கோடி.
அந்த தீவுல இருக்கிற ஒரு company-ஐ —
அமெரிக்கா தன் பக்கம் வேணும்,
சீனா தன் கட்டுப்பாட்டுல வேணும்,
ஐரோப்பா தன் நாட்டுக்கு வரவேணும்,
ஜப்பான் தன் மண்ணுல fabrication வேணும்.
எல்லாரும் TSMC-ஐ சுத்தி நடனமாடுகிறார்கள்.
இது எண்ணெய் யுத்தம் இல்ல —
இது Chip War. Silicon War. AI War.
மூணும் ஒண்ணே.
---
அடுத்த பகுதி: TSMC ஏன் தைவானை விட்டு வெளியே போக மறுக்குது? America ஏன் TSMC-ஐ Arizona-வுக்கு இழுக்குது? அதுக்கு Morris Chang என்ன சொன்னார்? — தொடரும்.
அறிந்து கொள்வோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக