Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 நவம்பர், 2017

Top 10 காஸ்ட்லி விபத்துகள்.

Image result for space shuttle columbia accident
  1. செர்னோபில் விபத்து ( Chernobyl  )
1986 ஏப்பிரல் 26  ம் தியதி யுக்ரைனிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஒரு விபத்து நடந்தது. அந்த நிலையத்தின் நான்காம் எண் ரியாக்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. யுக்ரைனின் பிரிப்யாட் நகருக்கு அருகே நடந்தது இந்த விபத்து. இந்த விபத்து தான் உலகிலேயே அதிக காஸ்ட்லி விபத்து. யுக்ரைனிலுள்ள பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு வகையில் இதனால் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 இலட்சம் பேர் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1.7 மில்லியன் மக்கள் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டன. இந்த விபத்தினாலும், இதன் பின்விளைவுகள் தோற்றுவித்த கேன்சர் போன்ற நோய்களினாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றே கால் இலட்சம்.
சரியான பாதுகாப்பு விதிகளைப் பயன்படுத்தாததால் ஏற்பட்ட இந்த விபத்தினால் செலவான பணம் 200 பில்லியன் டாலர்கள் !
  1. கொலம்பியா விண்கல விபத்து
கல்பனா சாவ்லா வை பலி கொண்ட விபத்து என்றால் சட்டென நினைவுக்கு வரும். 2003ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தியதி கொலம்பியா விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியது. விண்கலத்தில் ஏற்பட்ட சின்ன பழுது இந்த விண்கலத்தையே பல உயிர்களுடன் சாம்பலாக்கியது. இந்த விண்கல விபத்தினால் ஏற்பட்ட இழப்பு சுமார் 16 பில்லியன் டாலர்கள். விண்வெளி விபத்துகளில் அதிக காஸ்ட்லி விபத்து இது தான்.
இந்த விபத்து குறித்த விசாரணை ஆய்வுகளுக்காக செலவான தொகை 500 மில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக காஸ்ட்லியான விபத்து விசாரணையும் இது தான்.
  1. பிடிஸ்டீஜ் எண்ணை விபத்து
77000 டன் எடையுள்ள எரிபொருளுடன் கடலில் சென்றது பிரஸ்டிஜ் ஆயில் டேங்கர் கப்பல். ஸ்பெயினிலுள்ள கலீசியா என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தபோது பெரும் புயலில் சிக்கியது. பன்னிரண்டு எண்ணை டேங்க்கள் இதனால் வெடித்துச் சிதறின. உப்புக் கடல் எண்ணைக் கடலானது. உதவிக்காக மாலுமி அருகிலுள்ள நாடுகளைக் கெஞ்சினார். யாராவது உதவுவார்கள் என்பது அவருடைய எண்ணம் ஆனால் நடந்தது வேறு. கரைக்கே வராமல் ஆழ்கடலுக்குப் போ என எல்லா நாடுகளும் மாலுமியை வற்புறுத்தினர். நிராயுதபாணியான கேட்பன் கொஞ்சம் கொஞ்சமாய் கப்பலுடன் கடலில் மூழ்கினார்.
2002ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நடந்த இந்த விபத்து உலகிலேயே அதிக காஸ்ட்லியான விபத்துகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 20 மில்லியன் காலன் எண்ணை கடலில் சிந்தியது. இந்த் விபத்தில் விரையமான தொகை 12 பில்லியன் டாலர்கள்.
  1. டைட்டானிக்
டைட்டானிக் கப்பல் உருவாக்க அன்றைக்கு செலவிடப்பட்ட தொகை 7.5 மில்லியன் டாலர்கள். இன்றைக்கு உத்தேசமாக 180 மில்லியன் டாலர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். பணத்தைத் தாண்டி டைட்டானிக் விபத்து பல்வேறு கனவுகளையும், உயிர்களையும் சிதைத்து விட்டது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். 1500 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இந்த விபத்து நடந்தது 1912ம் ஆண்டு ஏப்பிரல் 15ம் தியதி.
2007ம் ஆண்டு டைட்டானிக் கதையை படமாக எடுக்க ஜேம்ஸ் கேமரூன் செலவிட்ட தொகை 200 மில்லியன் டாலர்கள். உலகெங்கும் இந்தப் படம் வாரிக் குவித்த வசூல் 2.18 பில்லியன் டாலர்கள்.
  1. சேலஞ்சர் விபத்து
1986ம் ஆண்டு சனவரி 28ம் நாள். சேலஞ்சர் எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக 73 வினாடிகள் பறந்த விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியது. இந்த விண்கலத்தின் இணைப்புகள் ஒன்று சரியாக இணையாததால் கசிவு ஏற்பட்டு அது ஒரு மிகப்பெரிய விபத்தாக மாறி விட்டது.
அந்த விபத்தினால் நாசமான ஸ்பேஷ் ஷட்டில் இன்றைய கணக்குபடி 4.5 பில்லியன் டாலர்கள். அன்று அது 2 பில்லியன் டாலர்கள். இது ஏன் வெடிச்சுது ? எதுக்காக வெடிச்சுது ? இந்த தப்பை யார் தலையில அடிச்சு வைக்கலாம் என நடத்திய விசாரணைகளுக்கு மட்டும் 450 மில்லியன் டாலர்கள் செலவானது !
  1. பைப்பர் ஆல்ஃபா ஆயில்  ரிக்
ஒரு ஊழியர் ஒரு பாதுகாப்பு வால்வை உருவி எடுத்து செக் பண்ணிவிட்டு திரும்ப மாட்டவில்லை. கவனக் குறைவாக செயல்பட்ட ஒரு குட்டி விஷயம், அது தான் உலகின் மிகப்பெரிய ஆயில் விபத்துக்குக் காரணமாகிவிட்டது. நாளொன்றுக்கு 3.2 இலட்சம் பேரல் அளவுக்கு ஆயில் உற்பத்தி செய்யக்கூடிய தளம் அது.
இரவு பத்து மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்த அந்த எண்ணை தளம் யாராலும் அணைக்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. 167 பேர் வேலைசெய்து கொண்டிருந்தனர். ஒருவரும் தப்பவில்லை. செலவுக் கணக்கு 1988 கணக்குபடி 3.5 பில்லியன் டாலர்கள்.
  1. எக்ஸான் வெல்டிஸ்
கொஞ்சம் எண்ணை கொட்டிடுச்சு, அதை கிளீன் பன்றதுக்கு ஆன செலவு “உலகிலேயே அதிகமாக” என மாறிப் போனது. 1989ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தியதி 10.8 மில்லியன் காலன்கள் அளவுள்ள எண்ணை தண்ணீரில் கொட்டி விட்டது. அதை சுத்தம் பண்ணுவதற்கு ஆன செலவு 2.5 பில்லியன் டாலர்கள் !!!
கடல்ல எண்ணை கொட்டினா அவ்ளோ செலவாகுமா என வியக்க வேண்டாம். இது கொட்டிய இடம் அப்படி, அந்த இடத்துக்குப் போவதும், அதை சுத்தம் செய்வதும் ரொம்ப சிக்கலாக மாறிப் போனதால் செலவும் தலை சுற்ற வைத்து விட்டது.
  1. பி 2 பாம்பர் விபத்து
2008ம் ஆண்டு பி2 ஸ்டெல்த் பாமர் எனும் ராணுவ விமானம் கிளம்பிய அடுத்த வினாடியே மூக்கு இடிக்க கீழே விழுந்து பஸ்மமானது. ஏதோ ஒரு விபத்தென்று இதை ஒதுக்கி விட முடியாது. காரணம், இந்த விமானத்தின் விலை அப்படி . மேற்கு பசிபிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள குவாம் என்னுமிடத்தில் இந்த விபத்து நடந்தது. இது அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடம்.
இந்த விமான விபத்தினால் அழிந்த தொகை 1.4 பில்லியன் டாலர்கள் என்றால் உறைக்காது, 93 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் மிரட்டும்.
  1. ஃபுகுச்ஜிமா டாய்ச்சி அணு விபத்து
வெகு சமீபத்தில், 2011ம் ஆண்டு நடந்த ஒரு மாபெரும் விபத்து இது. தொடர்ச்சியான அணு உலைக் கருவிகளின் செயலிழப்பினால் இந்த விபத்து ஏற்பட்டது. உலகெங்கும் அணு உலைகளுக்கு எதிரான குரல்கள் வலுவடைய இந்த விபத்தும் ஒரு காரணமாக இருந்தது. சுனாமி அதன் பின் நடந்த நில நடுக்கம் போன்றவை இந்த விபத்துக்குக் காரணமாகிவிட்டது.
இந்த விபத்து கொண்டு வரப்போகும் ஆபத்துகளும், உயிரிழப்புகளும் எத்தனை என்பது இனி வரும் ஆண்டுகளில் தான் தெரியும். இந்த விபத்து தொடர்பாக கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகை மட்டுமே சுமார் 60 பில்லியன் என்கிறது ஒரு புள்ளி விவரம். அணு உலை மிகவும் பாதுகாப்பானது எனும் கூற்றை பொய்யாக்கிய ஒரு விபத்து இது எனலாம்.
  1. வாங்கோன்சாங் விபத்து
1616ம் ஆண்டு மேய் மாதம் 30ம் தியதி நடந்த விபத்து இது. இந்த விபத்தினால் கொல்லப்பட்ட மக்கள் தொகை சுமார் 20,000 என்பது அதிர்ச்சித் தகவல். வாங்கோன்சாங் எனுமிடத்துக்கு அருகே இருந்த வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்து இது.
சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சத்தம் எதிரொலித்தது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப் போனார்கள். வெடித்த இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பொருட்கள் முப்பது கிலோமீட்ட்டர் தொலைவைத் தாண்டி போய் விழுந்தன. இது கடவுள் கொடுத்த தண்டனை என்று அந்த காலத்தில் மக்கள் சொல்லிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக