Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 டிசம்பர், 2017

நம் முன்னோர்களின் வியக்கவைக்கும் ஆன்மீக அறிவியல் ரகசியகங்கள்! 

நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் ஒவ்வொரு விசயத்திலும் ஆன்மீகத்துக்குள் அறிவியல் ஒளிந்திருப்பதை நாம் காணமுடியும். 

தஞ்சை பெரியகோயில், திருச்சி மலைக்கோட்டை, மதுரை மீனாட்சி, நெல்லையப்பர் என தொடங்கி தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் நம்மை வியக்க வைக்கும் ஆன்மீக அறிவியல் அதிசயங்கள் இருக்கின்றன. இவற்றில் பல நமக்கு மிகவும் புதியதாக இருக்கலாம். 

இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது இதனை கவனிக்கத்தவறாதீர்கள். 

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

நான்மானக்கூடல், கிழக்கத்திய ஏதென்ஸ், திருவிழா நகரம், தாமரை நகரம் மற்றும் தூங்கா நகரம் எனப்படும் பல்வேறு சிறப்புப்பெயர்களை மதுரை மாநகரம் பெற்றுள்ளது. இங்கு மிகச் சிறப்பு என்றால் அது மீனாட்சியம்மன் கோயில்தான். மீனாட்சியம்மன் கோயிலில் பல சிறப்புகள் இருந்தாலும் அங்கு இருக்கும் தாமரைக் குளத்தில் ஒரு சிறப்பு உள்ளது. 

பொற்றாமரைக்குளம்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 

கோபுரங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் பதினான்கு கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோயிலிலும் இந்த அளவுக்கு கோபுரங்கள் இல்லை. 

திருவண்ணாமலை 

ஆணைமலை அடிவாரத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு முக்கிய வழிபாட்டு ஸ்தலம் ஆகும். 

பக்கத்து வாசல் வழியாக 

திருவண்ணாமலை சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வராமல், பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.

பிச்சாண்டவர் கோலம்

திருவண்ணாமயைில் 8ம் நாள் அன்று பிச்சான்டவர் கோலத்தில் சாமி ராஜகோபுரம் வழியாக வெளியே வருவார் மற்றும் ஆறுத்ரா தரிசனத்தின் போது நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வருவார். 

திருக்கோவிலூர் 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ளது இந்த விஷ்ணு கோயில். மற்ற கோயில்களைப் போலல்லாமல் இவர் இங்கு வலது கையில் சங்கு வைத்துள்ளார். பொதுவாக விஷ்ணு இடதுகையில்தான் சங்கு வைத்திருப்பார். 

சிதம்பரம் 

சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடியே, கோவிந்தராஜ பெருமாளையும், நடராஜரையும் தரிசிக்கமுடியும். இது வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பம்சமாகும். 

சிதம்பரம் சுற்றுலா பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி அமைதியான சூழலைக்கொண்டிருக்கும் இந்த கோயில் நகரம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கும், கோயிற்கலை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான சுற்றுலா தலமாக திகழ்கிறது. 

சிதம்பரம் நடராஜர் கோயில்

ஒரு கோயிலின் மூலவரே வீதி வலம் வரும் நிகழ்வு எந்த கோயிலிலும் நடக்காத ஒன்று. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அது நிகழ்கிறது. இதை பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் பலரும் விரும்பி பார்க்கின்றனர். .

சிதம்பர ரகசியம் 

சிவ பக்தர்களுக்குரிய திருவாதிரையும், விஷ்ணு பக்தர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே நேரத்தில் ஒரே கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும்தான். 

திருநாகேஸ்வரம்

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் நெய்வேத்தியப் பண்டங்கள் எதிலும் உப்பு சேர்ப்பதில்லை. 

ராமேஸ்வரம் 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பெருமாள் கோயில்களில் வழங்குவதுபோல தீர்த்தம் கொடுக்கிறார்கள். இது வேறெந்த சிவன்கோயிலிலும் நடைமுறை வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆழ்வார்குறிச்சி 

ஆழ்வார்குறிச்சி நடராஜர் கோயிலில் உள்ள கற்சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டது. இந்த கல்லைத் தட்டினால் வெண்கல ஓசை வரும். 

ரத்னகிரி மலை 

ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்த சிறிது நேரத்தில் பால் தயிராக மாறும் அதிசயம் நிகழ்கிறது. 

ஐவர் மலை 

குளித்தலை அருகே ஐவர் மலை என்ற மலையுள்ளது. இந்த மலையின் மேல் காகங்கள் பறப்பதில்லை. 

தக்கலை 

கன்னியாகுமரி அருகே தக்கலையில் இருக்கும் கேரளபுரம் சிவன் கோயிலின் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் வருடத்தில் இருமுறை நிறம் மாறுகிறார். 
கற்சிலை மகிமை அற்புதம் நிகழும் இந்த விநாயகர் சிலை சந்திரகாந்த கல் எனும் அரிய வகை கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.



பத்ரிநாத் 

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோயில். சிவபெருமானை தரிசிக்கும்பொருட்டு செல்லும் பக்தர்களுக்கு இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கும். 


ஆறுமாதம் தொடர்ந்து எரியும் விளக்கு. 

ஆறு மாதம் எரியும் தீ மே மாதம் முதல் வாரம் திறக்கப்படும் நடை, நவம்பர் முதல் வாரத்தில் மூடப்படும். அதன் பிறகு ஆறு மாதங்கள் மூடியே இருக்கும். நவம்பர் மாதம் மூடும் போது ஏற்றப்படும் தீபம் திரும்ப மே மாதம் திறக்கும் வரையில் அப்படியே எரிந்துகொண்டிருக்கும். 

வாரணாசி 

காசி என்று அழைக்கப்படும் வாரணாசியின் 45மைல் தொலைவு சுற்றளவுக்கு எந்த கருடனும் பறப்பதில்லை.  

சமயபுரம் 

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மன் உக்கார்ந்த கோலத்தில் மிகப்பெரிய திருமேனி வடிவமைக்கப்பட்டிருக்கும். வேறெந்த கோயிலிலும் இப்படி ஒரு சிலை அமைந்த கற்பகிரகம் இல்லை. 
அதிலும் இந்த அம்மன் சிலை பல வகை மூலிகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. 

தேனி 

தேனி மாவட்டம் சுருளி மலைக்குகையில் விபூதி அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கிறதாம். இந்த குகைக்குப் பெயர் திருநீறு குகை.  

சென்னி மலை


சென்னி மலை முருகனுக்கு அபிசேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை
.   

திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயலில் இருக்கும் பார்த்தசாரதியின் கையில் சக்கரம் இல்லை  

சிக்கல் 

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் முருகன் சிலை வியர்க்கும் நிகழ்வு அதிசயமாக பார்க்கப்படுகிறது. 

கோவை 

தியானலிங்கத்தில் அனைவருமே கருவறை வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்ய முடியும். ஏழு சக்கரங்களும் சக்தியூட்டப்பட்டு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட உலகில் இருக்கும் ஒரே தியானலிங்கம் இது தான். 
பர்வதமலை சிவன் கோவிலில் பக்தர்களே கருவறை சென்று லிங்கத்தைத் தொட்டு பூஜை செய்யலாம் சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டேஷ்வர் கோவிலில் மட்டும் தான் சிவன் படுத்த நிலையில் காட்சி தருவார். 

சக்தி அதிர்வுகள் நிறைந்த கோவில் அதிசயங்களும் ஆன்மீகமும் இவையனைத்தும் ஆன்மீகத்துடன் அறிவியல் கலந்து நிகழ்வுகளாகும். 

இதுமாதிரி உங்களுக்கு தெரிந்த உங்கள் அருகாமைப் பகுதிகளில் நிகழும் அறிவியல் ஆன்மீக அதிசயங்களை இங்கு குறிப்பிடுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக