Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 டிசம்பர், 2017

எச்சரிக்கை! நீங்க நூடுல்ஸ் பிரியரா? அப்ப மறக்காம இத படிங்க.

தற்போது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் நூடுல்ஸ். இதை பலர் ஸ்நாக்ஸ் நேரத்தில் மட்டுமின்றி, காலை உணவாகவும், இரவு உணவாகவும் உட்கொள்கின்றனர். முக்கியமாக இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
 


சொல்லப்போனால், இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆகவே பெற்றோர்களும் குழந்தை விரும்பி சாப்பிடுகிறது என்று அடிக்கடி வாங்கி கொடுக்கிறார்கள். இது தான் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.


Danger of Eating Too Much Instant Noodles
குழந்தைக்கு இந்த மாதிரியான உணவுப் பொருளை வாங்கிக் கொடுத்தால், அது அவர்களது ஆரோக்கியத்திற்கே உலை வைத்துவிடும். ஏனெனில் நூடுல்ஸில் சத்துக்கள் மிகவும் குறைவு மற்றும் ஆரோக்கியத்தை சீரழிக்கக்கூடியதும் கூட.
இக்கட்டுரையில் ஏன் நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள் என்பதற்கான காரணங்களும், வரக்கூடிய நோய்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் குறைவு

நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் குறைவு

பதப்படுத்தப்பட்ட உணவான நூடுல்ஸ் உடல் பருமனை உண்டாக்கும். இதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல. அப்படியே சாப்பிட்டாலும், பசியை இன்னும் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி

வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி

ஆய்வில், வாரத்திற்கு 2 முறை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
மைதா நிறைந்தது

மைதா நிறைந்தது

மைதாவால் ஆனது தான் நூடுல்ஸ். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. ஏனெனில் இதில் சத்துக்கள் குறைவு மட்டுமின்றி, அதிகமாக பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஃப்ளேவர்களும் நிறைந்தது.
கெட்ட கொழுப்புக்கள்

கெட்ட கொழுப்புக்கள்

நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் எடிபிள் வெஜிடேபிள் ஆயில், சர்க்கரை, சர்க்கரை சிரப், ப்ளேவர் மற்றும் இதர ஆரோக்கியத்தைப் பாழாக்கும் ஏஜென்ட்டுகள் அடங்கியுள்ளது.
எம்.எஸ்.ஜி

எம்.எஸ்.ஜி

நூடுல்ஸில் எம்.எஸ்.ஜி என்னும் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.
மோசமான டயட்

மோசமான டயட்

டயட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த டயட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.
சோடியம் நிறைந்தது

சோடியம் நிறைந்தது

நூடுல்ஸில் சோடியம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அது இரத்த அழுத்த பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, இதய நோய்க்கும் வழிவகுக்கும்.
ஊட்டச்சத்தை உறிஞ்சும் திறன் குறையும்

ஊட்டச்சத்தை உறிஞ்சும் திறன் குறையும்

நூடுல்ஸை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அது அவர்களது உடலில் மற்ற உணவுகளால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களை உறிஞ்சும் திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட நேரிடும்.
கருச்சிதைவு

கருச்சிதைவு

கர்ப்பிணிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளான நூடுல்ஸை உட்கொண்டால், அது கருச்சிதைவு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் நூடுல்ஸில் உள்ள உட்பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் பருமன்

உடல் பருமன்

நூடுல்ஸில் இருக்கும் கொழுப்புக்கள் மற்றும் சோடியம், உடலில் நீர் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்கும். அதிலும் தினமும் ஒருவர் நூடுல்ஸை உட்கொண்டால், அது அவரை விரைவில் குண்டாக்கிவிடும்.
புரோபிலீன் கிளைக்கால்

புரோபிலீன் கிளைக்கால்

நூடுல்ஸில் உள்ள புரோபிலீன் கிளைக்கால், உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும்.
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

ஒருவர் நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதை தீவிரமாக்கி, நீண்ட நேரம் மலக்குடலில் மலத்தை தேக்கி வைத்து, அதன் விளைவாக மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.
மூளை வளர்ச்சி

மூளை வளர்ச்சி

ஆய்வுகளில் மூளையின் சீரான செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் 8 சத்துக்கள் மிகவும் அவசியம். அதில் லிசிதின், புரோட்டீன், சர்க்கரை, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி போன்றவை குறிப்பிடத்தக்கவை. நூடுல்ஸில் இந்த சத்துக்கள் மிகவும் குறைவு என்பதால், இதை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது, அது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும்.
புற்றுநோய்

புற்றுநோய்

நூடுல்ஸ் எண்ணெயால் பதப்படுத்தப்படும் போது, ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதனுள்ளே உற்பத்தியாகும். சமையல் ஸ்டார்ச் நிறைந்த நூடுல்ஸை உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் அக்ரைல்அமைடை உற்பத்தி செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக