Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

Smartphone கேமராவை இந்த ஆப்ஸ் இருந்தா வேற லெவலில் பயன்படுத்தலாம்! கேமரா டிப்ஸ்!

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அமைப்பு என்பது மிகவும் முக்கிய அமைப்பாகவே மாறிவிட்டது. உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை வெறும் படங்கள் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கு மட்டுமில்லாமல் கூடுதலான சேவைகளுக்கும் நீங்கள் பயன்படுத்த முடியும் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா எத்தனை மெகா பிக்சலாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்த பயன்பாடுகள் உங்களிடம் இருந்தால் உங்கள் கேமரா வேற லெவல் தான். ஸ்மார்ட்போன் கேமரா மூலம் இப்படி சமாச்சாரங்கள் எல்லாம் செய்ய முடியுமா என்று நீங்களே ஆச்சரியப்பட்டுப் போய்விடுவீர்கள்.

இந்த ஆப்ஸ் இருந்தால் மட்டும் போதும்.

ஸ்மார்ட்போன் கேமரா புகைப்படங்கள் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கு மட்டுமின்றி, கணித ஈக்குவேஷன்களை சரியாகத் தீர்ப்பது முதல் துவங்கி, தாவரங்கள் மற்றும் பூக்களை அடையாளம் காண்பது, திசைப் பலகையில் உள்ள சொற்களை எந்த மொழியிலும் மொழிபெயர்த்துக்கொள்ளலாம் என்பது வரை, இன்னும் பலவிதமான கூடுதல் சேவைகளை உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் எளிதாக நீங்கள் செய்து முடிக்கலாம். அதற்கு, உங்களிடம் இந்த 10 கேமரா ஆப்ஸ் பயன்பாடுகள் இருந்தால் மட்டும் போதும்.

 

இந்த பயன்பாட்டின் உதவியுடன் உங்களுடைய ஆவணங்களை ஆட்டோமேட்டிக் கிராப் செய்து ஸ்கேன் செய்யலாம். அதேபோல், ஸ்மார்ட்போனிலிருந்து நேரடியாக பைல்களை பிரிண்ட் செய்யவும் அனுமதிக்கிறது. இத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட பைல்களை பராமரிக்க பைல் மற்றும் பைல் மேனேஜர் வசதியும் இதில் உள்ளது. அண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.


2. Warden Cam

இந்த பயன்பாட்டின் உதவியுடன் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கண்காணிப்பு கேமராவாக மாற்ற முடியும். இதன் மூலம் ஒரு ஸ்மார்ட்போன் கேமராவை ரெக்கார்டராகவும் மற்றொன்றைப் பார்வையாளராகவும் பயன்படுத்த முடியும். 24 மணிநேர பாதுகாப்பை வழகினும் இந்த பயன்பாடு Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.


 3. Night Sky Lite

விண்வெளி பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த பயன்பாடு மிகவும் உதவியானதாக இருக்கும். Night Sky எனப்படும் இந்த பயன்பாடு விண்ணில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள், விண்மீன், கிரகங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை அடையாளம் காண உதவுகிறது. இந்த பயன்பாடு iOS இல் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


4. Google Lens

பெரும்பாலானோருக்கு இந்த பயன்பாட்டைப் பற்றித் தெரிந்திருக்கும், சுருக்கமாக சொன்னால் இது ஒரு ஆல்-இன்-ஆள் பயன்பாட்டுச் சேவை என்று கூறலாம். ஸ்கேன் செய்து மொழிபெயர்க்கவும், தாவரங்களை அடையாளம் காணவும், குறியீடுகளை ஸ்கேன் செய்யவும் மேலும் ஒரு பொருளை ஸ்கேன் செய்து அதன் விலை மற்றும் முழு தகவல்களையும் கொடுக்கும் படி இந்த பயன்படு பல சேவைகளை செய்து முடிகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இது இலவசமாகவே கிடைக்கிறது.


5. Spectre

கம்புடேஷனல் போட்டோகிராபி தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் நீங்கள் படம்பிடிக்கும் புகைப்படங்களிலிருக்கும் மக்களை மறைந்து போகச் செய்கிறது, அதாவது ஹைடு செய்கிறது. இதனால் உங்களுடைய புகைப்படத்தில் இருக்கும் தேவையில்லாத போக்குவரத்தை அகற்றலாம் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்பெக்டர் iOS இல் மட்டுமே கிடைக்கிறது.


6. PlantSnap

இந்த அட்டகாசமான பயன்பாடு, ஏதேனும் தாவரங்கள் முன்னிலையில் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஓபன் செய்து போட்டோ பட்டனை ஒருமுறை கிளிக் செய்தால், அந்த தாவரத்தின் முழு பெரியார் மற்றும் விபரங்களை உங்களுக்கு நொடியில் சரியாக வழங்கிவிடும். இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி மரங்கள், தாவரங்கள் மற்றும் பூக்களை எளிதாக அடையாளம் காணலாம். இந்த பயன்பாடு Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.


7. Google Translate

இந்த மொழிபெயர்ப்பு பயன்பாடுகள் முறையே 60 மொழிகளை மொழிபெயர்க்க உதவுகின்றன.உங்களிற்கு மொழிபெயர்ப்பு தேவைப்படும் இடங்களில் உங்கள் கேமராவை சைன்போர்டுகள், உணவக மெனுக்கள் மற்றும் உங்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி தேவைப்படும் இடங்களில் சுட்டிக்காட்டினால் மட்டும் போதுமானது. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.


8. AR Ruler

நீங்கள் அளவிட விரும்பும் மேற்பரப்பில் இலக்கை குறிவைத்து, பயன்பாட்டின் டேப் அளவீட்டுக் கருவியைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இந்த பயன்பாட்டின் உதவியுடன் செ.மீ, மீ, மிமீ, அங்குலம், அடி மற்றும் முற்றத்தில் நேரியல் அளவுகளை அளவிடலாம். அதேபோல் இதில் தூரங்கள், கோணங்கள், தொகுதி, பரப்பளவு மற்றும் சுற்றளவு ஆகியவற்றை அளவிட இது உங்களை அனுமதிக்கிறது. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.


9. Mathway

மாணவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை இயற்கணிதம் முதல் சிக்கலான கால்குலஸ் வரை, பயனர்கள் மிகவும் கடினமான கணித சிக்கல்களைத் தீர்க்க Mathway உதவுகிறது. உங்கள் சிக்கலைத் தட்டச்சு செய்க அல்லது உங்கள் கேமராவை சுட்டிக்காட்டி, உடனடி பதில்களைப் பெற ஒரு புகைப்படத்தை எடுக்கவும். விரிவான படிப்படியான தீர்வுகளைப் பெறுவதற்கான விருப்பமும் இதில் உள்ளது. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக