Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் வீடுகள், சிறு, குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழக அரசும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் மே 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், மின் கட்டணம் செலுத்த 2 மாதம் கால அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக