Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 டிசம்பர், 2017

இந்த "பழக்கம்" உங்களுக்கும் இருந்தால், இன்றோடு முடித்துக்கொள்ளுங்கள்.!

முடிந்த வரை நமது அன்றாட உறக்க சுழற்சியை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்ட ஸ்மார்ட்போன்கள், நம்மை தூக்கத்திலும் விடாது துரதியடிக்கிறதென்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம்.?
தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது போல ஸ்மார்ட்போனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு உறங்குபவர்களை மிக எளிதாக காண முடிகிறது. தலையணையை கட்டிப்பிடித்தால் மனநிலைக்கு நல்லது. ஆனால் ஸ்மார்ட்போனை வாரியணைத்துக் கொண்டால் யாருக்குமே நல்லது அல்ல.!

இந்த பழக்கம் உள்ளவரா நீங்கள்.?

தலையணையைப் போல மொபைல்போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், குறிப்பாக தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்கும் நபரா நீங்கள்.? இது முழுக்க முழுக்க உங்களுக்கான தொகுப்புதான். உங்களின் இந்த பழக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ?
புற்றுநோய் வருமா.?

புற்றுநோய் வருமா.?

மொபைல்போன்களை உடன் வைத்து உறங்கினால் புற்றுநோய் வருமா.? - இந்த கேள்விக்கான மிகத்துல்லியமான பதிலோ அல்லது ஆய்வு முடிவோ கிடையாது. ஆனால் எலிகளின் மீது மொபைல் கதிவீச்சை வெளிப்படுத்தி நிகழ்த்தப்பட்டதொரு ஆய்வில் கிட்டத்தட்ட "ஆம். புற்றுநோய்களுக்கான வாய்ப்புண்டு" என்று கண்டறியப்பட்டுள்ளது.
நமக்கு ஏன் வம்பு.?

நமக்கு ஏன் வம்பு.?

ஆனால், அது மனிதர்களுக்கு சாத்தியமா என்பது பற்றிய தெளிவில்லை. நமக்கு ஏன் வம்பு.? ஸ்மார்ட்போனை சற்று ஒருங்கட்டிவிட்டு தூங்கினால் எந்த கப்பல் கவிழ்ந்து விடப்போகிறது.? மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை "உண்டாக்கலாம்" என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
புற்றுநோய்கள் மட்டுமின்றி வேறென்ன பாதிப்புகள்.?

புற்றுநோய்கள் மட்டுமின்றி வேறென்ன பாதிப்புகள்.?

மொபைல்போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷனானது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல்போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென்று ஆய்வொன்று பீதியை கிளப்பியுள்ளது.
உடல்நல பாதிப்புகளை தவிர்த்து ஏதாவது தீமைகள்.?

உடல்நல பாதிப்புகளை தவிர்த்து ஏதாவது தீமைகள்.?

நிச்சயமாக.! கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் உமிழவில்லை நெருப்பையும் தன்னுள் கொண்டுள்ளதென்பதை நீங்கள் உணரவேண்டும். பேட்டரி சிக்கல்கள் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர் ஏற்படும் தீமைகளை நீங்களே அறிவீர்கள்.
ஒட்டுமொத்தமாக.!

ஒட்டுமொத்தமாக.!

முன்னர் குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போன்கள் நமது உறக்க சுழற்சியையே மாற்றியமைத்து விட்டது. இரவென்பது ஓய்வு கொள்ளும் நேரம், அதை நிகழ்த்தாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் - குறையும், பாதிப்பும் ஏற்படும். தூக்கமின்மைக்கு முதல் மருந்தே ஸ்மார்ட்போனை ஓரங்கட்டுவது தான்.
சின்ன யோசனை

சின்ன யோசனை

ஒருவேளை அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணையருகே வைக்கும் நிர்பந்தம் உங்களுக்கு உண்டெனில் அதையொரு நியாமான காரணமான சொல்ல வேண்டாம். எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு அலாரக் கடிகாரம் வாங்கினால் என்ன.? யோசித்து செயல்படுங்கள்.!
, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக