Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 17 பிப்ரவரி, 2018

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் இரண்டு பகுதிகள் உண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும் பொது அறிவு பகுதி இந்த இரண்டு பகுதிகளில் இருந்து 300 மதிப்பெண்களுக்கான 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் டிகிரி தரத்தில் இருக்கும். சவாலாக இருக்கும் அகல படிப்பதைவிட ஆழ படிப்பவர்களும், படித்ததை தேர்வில் பயன்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே தேர்வை வெல்ல முடியும்.


1. இந்தியாவின் ஐன்ஸ்டீன் என்பவர் யார்?1. இந்தியாவின் ஐன்ஸ்டீன் என்பவர் யார்?
1. கனிஷ்கர்
2. சுஸ்ருதா
3. அசோகர்
விடை: 1. கனிஷ்கர் 
விளக்கம் :
 சரகா என்ற மருத்துவ நூல் சுஸ்ருதா மற்றும் சரக சம்ஹிதை ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.
கனிஷ்கரை சரகரை இரண்டாம் அசோகர் என்று கூறுவார்
கனிஷ்கர் புத்த வரலாறு சூத்திர அலங்காரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

2. காந்தரக்கலை யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தியது?

1.  அசோகர்
2. கனிஷ்கர்
3. ஹர்சர்
விடை: கனிஷ்கர்
விளக்கம் :
 கனிஷ்கர் காலத்தில் மதுரா மற்றும் காந்தரக்கலை மிகவும் சிறபபாக வளர்சியுற்றது. இந்திய கிரேக்கம் சேர்ந்த சிற்ப கலையே காந்தரக் கலை ஆகும்

3. வரலாற்றின் முக்கியமான இரண்டாம் பானிபட் போர் எப்பொழுது நடைபெற்றது?

1 1776
2 1668
3 1556
விடை: 1556
விளக்கம் :
 நவம்பர் 5 தேதி டில்லியை ஆட்சி செய்த ஹெமுவிற்கும் அக்பருக்கும் நடந்தது. இதுவே பானிபட் போர் என அழைக்கப்படுகின்றது. இதில் அக்பர் வெற்றி பெற்றார்.

4. சபர்மதி ஆசிரம்மம் எப்பொழுது தொடங்கப்பட்டது ?

1. 1916 இல் தோற்றுவிக்கப்பட்டது
2. 1919இல் தோற்றுவிக்கப்பட்டது
3. 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது
விடை: 1916இல் தோற்றுவிக்கப்பட்டது 
விளக்கம் 
: நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொணடு மக்களின் வறுமையை கண்டு வருந்தி, இந்தியர்களின் கண்ணிரை துடைக்க விரும்பினார் காந்தி. 1916இல் அலகாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அமைத்தார்.
அகிம்சையை ஆயுதமாக பயன்படுத்தினார்.

5. கிராம சம்ரிதி ஈவாம் ஸ்வச்சா பிரச்சாரத் திட்டம் என்றால் என்ன?

1 தூய்மை இந்தியா தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடத்துதல்
2 கிராமங்களின் வளர்ச்சயில் ஈடுபடுத்துதல்
3 பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம்
விடை: 1 தூய்மை இந்தியா தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடத்துதல்
விளக்கம் : தூய்மை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துதல் பிரச்சாரத்தின் மூலம் கிராமப்புற மக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் நோக்கம் ஆகும்.

6. ஐஎன்எஸ் தாரசா எந்த ஆண்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது?

1 2017
2 2010
3 2016
விடை: 2017 
விளக்கம் :
 ஐஎன்எஸ் தாராசா எனப்படும் போர் கப்பல் மும்பை
கடற்ப்படையிலிருந்து நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலொன்றான  தாரஸா தீவின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

7. சவுபாக்யா திட்டத்தின் நோக்கம் யாது?

1 வீடுகளுக்கு மானியம் வழங்குவது
2 அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது
3 கல்வி தொடர்பை மேம்படுத்தும் திட்டம் ஆகும்
விடை: 2 அனைத்து வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது
விளக்கம் : தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் உறுதி செய்யும் நோக்கிலான சவுபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

8. ஆப்ரேசன் அர்ஜூன் என்றால் என்ன?

1 இந்தியா சீனா எல்லைபிரச்சனைக்கு நடந்த துப்பாக்கி சூடு
2 பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்க நமது ராணுவம் எடுத்துள்ள நவடிக்கை
3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்.
விடை: 2 பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்க நமது ராணுவம் எடுத்துள்ள நவடிக்கை
விளக்கம் : பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்துவதை தடுக்க நமது ராணுவம் எடுத்துள்ள பதில் நடவடிக்கை ஆகும். இந்திய மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் என்னும் அந்நாட்டு துணை ராணுவம் அவ்வப்போது எல்லைத் தாண்டிய துப்பாக்கி சூடு நடத்திவருவதற்கெதிராகவே இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகின்றது.

9. நாட்டிலேயே பசுக்களுக்கான சாரணலாயம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது

1. மகாராஷ்டிரா
2. லக்னோ
3. மத்திய பிரதேசம்
விடை: 3 மத்திய பிரதேசம் 
விளக்கம் :
 நாட்டில் முதன் முதலாக பசுக்களுக்கான சரணாலயம் துவங்கி செயல்பட்டு வருகின்றது. பசுக்களுக்கு முக்கியத்துவம் இந்து மதத்தில் வழங்கப்படுகின்றது. பசுவதை தடுப்பு சட்டங்களும் நம் நாட்டில் உண்டு. பசுக்களை சிறப்பிக்கவும் அதன் முக்கியதுவம் அறியவே பசுக்களுக்கான சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக