Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 18 மார்ச், 2018

ஆலயத்தின் நுழைவாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?

ஆலயத்தின் நுழைவாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?

ஒவ்வொரு ஆலயத்திலும் நுழைவாயிலின் முன்பு பெரியதாக வாசப்படி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாசப்படியை தாண்டி தான் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்! அது ஏன் என்பதை பற்றி இங்கு காண்போம். 
🌟 ஆலயத்தினுள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும். முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும்.
🌟 பின்னர் வாயிற்காப்பாளர்களான துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். ஏனென்றால், அந்த படியை தாண்டும் போது, நாம் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன். இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்.
🌟 அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம். ஒரு ஆலயம் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும். எனவேதான் கோவிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடனும், மன நிம்மதியுடனும் வாழுங்கள் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக