Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 31 மார்ச், 2018

ஏன் இந்திய ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் மட்டும் உள்ளது?

ஏன் இந்திய ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் மட்டும் மட்டும் உள்ளது? 


இந்தியா சுதந்திர போராட்டத்திக்காக பல்வேறு தலைவர்கள் போராடி இருந்தாலும் ஏன் காந்தியின் உருவ படம் மட்டும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுகிறது என்ற கேள்வி நம்மில் நிறைய பேருக்கு இருக்கலாம் இதோ அதற்கான விளக்கம்..
.




  • இந்தியா சுதந்திரம் பெற்றபின் வெளிவந்த ரூபாய் நோட்டுகளில் யாருடைய உருவப்படமும்  இல்லாமல்  பல்வேறு குறியீடுகளுடன் தான் வெளிவந்தது 
  • அவ்வாறு வெளிவந்த நோட்டுகளை கொண்டு  கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதில் அச்சிட முடிந்தது அந்த காலத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் வந்ததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாயினர் 
  • இதை தடுக்கவே இந்திய ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் அச்சிடப்படுகிறது  பொதுவாக உருவப்படத்தை கொண்டு வெளிவந்த ரூபாய் நோட்டுகளை அச்சிட அந்த காலத்தில் சற்று சிரமமாக இருந்ததால் இதை பயன்படுத்தினர் 


      காந்தியின் உருவப்படம் மட்டும் ஏன்?

  • சுதந்திரத்துக்காக பல்வேறு தலைவர்கள் போராடி இருந்தாலும் காந்தியின் உருவ படம் மட்டும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற காரணம் பற்றி காண்போம் 
  • சுதந்திரத்துக்காக பல்வேறு தலைவர்கள் போராடி இருந்தாலும் ஏதேனும் ஒரு தலைவரின் உருவப்படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுவதன் மூலம் இந்திய மக்களின் ஒரு பிரிவினரை கெளரவம் செய்வது போன்றும்  மற்ற பிரிவினர் அசௌகரியமாக கருத கூடும் என எண்ணினார் 
  • அவ்வாறு செய்வதன் மூலம் இந்தியா-வில் பிரிவினை வாதம் ஏற்பட வழிவகுக்கும் என எண்ணினார் 
  • அந்த காலத்தில் சுதந்திர போராட்டத்திற்கு  ஒன்று சேர தலைமை தாங்கியவர் காந்தி மக்கள் அவர் மீது கொண்ட மதிப்பாலும் உலக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமாகியிருந்த காரணத்தாலும் அவரது உருவப்படம் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றது.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக