கோவிலில் நாம் செய்யும் தவறுகள் - திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு !
கோவிலில் வழிபடும் முறைகள் !!
✴ குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.
✴ சிவன் கோவிலென்றால் வில்வத்தாலும், பெருமாள் கோவிலென்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கோபுரத்தை வணங்கிவிட்டே உள்ளே செல்ல வேண்டும்.
✴ நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.
✴ விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக் கரணம் போட வேண்டும்.
✴ விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
✴ மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.
✴ நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. கோவிலுக்குள் ஒருவருடனும் பேசக்கூடாது.
✴ ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.
✴ ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.
✴ கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.
✴ சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.
✴ சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.
✴ கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இப்படியெல்லாம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக