ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!
உலக இதய கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், தந்தை அல்லது முதல் மகனாக பிறக்கும் ஆண்களுக்கு 55 வயதிற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும். பெண்களுக்கு 65 வயதில் முதல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றவருடன் ஒப்பிடுகையில், அப்பா - அம்மா இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு 50 வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்பத்தில் அதிக பேருக்கு இதய நோய் இருந்தால், அது அந்த குடும்பத்தில் இருக்கும் நபருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இதய தசை நோய் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருந்தால், இது இதயத்தின் உடலமைப்பு மற்றும் இரத்தத்தை பம்ப் செய்யும் செயல்திறனில் தாக்கத்தை உண்டாக்கும்.
இதயத்துடிப்பு!
இதய வடிவமைப்பு கோளாறு உண்டாகுமாயின், Arrhythmia எனப்படும் இதயத்துடிப்பு சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த பாதிப்பு இருக்கிறது என அறிந்தால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கரோனரி இதய நோய்!
மரபு ரீதியாக அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் தாக்கம் அதிகமாக இருந்தால் இந்த கரோனரி இதய நோய் பாதிப்பு ஏற்படும். எல்.டி.எல் எனப்படும் தீய கொலஸ்ட்ரால் மரபணு கோளாறு காரணமாக கூட அதிகளவில் தாக்கம் ஏற்படுத்த கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கின்றன.
குடும்ப வரலாறு!
உங்கள் அப்பா - அம்மா: தாத்தா - பாட்டி என உங்கள் முன்னோர்களுக்கு யார் யாருக்கு எல்லாம் இதய நோய்கள் இருந்தன, தீய கொலஸ்ட்ரால் தாக்கம் இருந்தன என நீங்கள் முதலில் உங்கள் குடும்ப வரலாற்றில் இருந்து கண்டறிய வேண்டும்.
ஏனெனில், இதன் காரணத்தால் கூட உங்களுக்கோ, உங்களது குழந்தைக்கோ இதய கோளாறு ஏற்படலாம்.
பரிசோதனை!
இரத்த அழுத்தம், இரத்த சர்கரை அளவு போன்றவற்றை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வயது அதிகரிக்க, அதிகரிக்க இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
உங்கள் வீட்டில் முன்னோருக்கு இதய நோய் இருந்தால், 18 வயதிலேயே இந்த பரிசோதனைகள் செய்து பார்த்துக் கொள்வது சிறந்தது.
ஆரோக்கியமான உணவுகள்!
தீய கொலஸ்ட்ரால், ஃபாஸ்ட்புட், எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, இதயதிற்கு வலு சேர்க்கும் உணவுகளை அதிகம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புகைப்பழக்கம்!
புகை, குடி போன்ற பழக்கங்களில் இருந்து வெளியே வாருங்கள். இதனால், இன்னும் இதய நோய் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அமையும். போதை பழக்கம் கூடவே கூடாது.
உடற்பயிற்சி!
குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்களாவது காலை - மாலை நடைப்பயிற்சி , ரன்னிங் அல்லது சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலின் அளவுக்கு அதிகமான எடையை குறைக்கவும், இதய நோய் ஏற்படும் விகிதத்தை குறைக்கவும் உதவும்.
இரத்த சர்க்கரை அளவு!
ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அதற்கான மருந்துகளை சரியாக எடுத்து வர வேண்டும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், இதன் காரணமாக இதய நோய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக