விக்கிபீடியா தாக்குப்பிடிக்குமா?
விக்கிபீடியா 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் சுமார் 70 ஆயிரம் தன்னார்வலர்கள் 100 க்கும் மேலான மொழிகளில் பணியாற்றுகிறார்கள். உலகின் புகழ்பெற்ற தகவல் தளமாக அது மாறியிருக்கிறது.
ஆனாலும், அது நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விக்கிபீடியாவுக்கு வந்துள்ள பெரிய ஆபத்துகளில் ஸ்மார்ட் போன்களும் ஒன்று. மேசைக் கணினிகள், மடிக் கணினிகளைவிடத் தற்போது ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன.
சிறப்புக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கட்டுரைகளை எழுதுவதிலும் தகவல்களைத் தேடுவதிலும் பெரும்பாலும் மேசைக் கணினியின் விசைப்பலகைகளைப் பயன்படுத்தும் தன்னார்வலர்களைத்தான் விக்கிபீடியா சார்ந்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் மூலம் விக்கிபீடியாவில் பணிபுரிய முடியாது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருவதால் விக்கிபீடியாவுக்காகப் பணிபுரியும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைகிறது.
ஸ்மார்ட் கைபேசிகளின் வருகைக்கு முன்னதாகவே கூட, விக்கிபீடியாவில் தகவல்களை ஏற்றுவதற்கான தொழில்நுட்ப முறைகள் கடினமாக இருப்பதால் தன்னார்வலர்களாக முன்வருபவர்கள் குறைந்து வந்துள்ளனர் என்று 2009 இல் எடுத்த ஒரு ஆய்வு கூறுகிறது.
மனித வரலாற்றில் சாமானியர்களுக்கு இவ்வளவு தகவல்கள் கிடைக்கும் வகையில் வேறு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. லாப நோக்கமில்லாமல் செய்யப்பட்ட இந்த முயற்சி பாதுகாக்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக